மேலும் அறிய

Gautam Adani: தினமும் ரூ.1600 கோடி சொத்து சேர்த்த கெளதம் அதானி.. மறக்காமல் இதையும் படிங்க..

கடந்த ஓராண்டில் கவுதம் அதானி தினமும் 1600 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஐ.ஐ.எப்.எல். வெல்த் ஹுரன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 

பெரும் பணக்காரர்கள் பட்டியல்

இந்தியாவில் நடப்பு ஆண்டில் 1000 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த் ஹுரன் இந்தியா நிறுவனம் முன்னதாக வெளியிட்டது.

அதில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.  முன்னதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பணக்காரராகவும் உருவெடுத்தார் அதானி.

தினம் 1600 கோடி சம்பாத்தியம்

இந்நிலையில், இந்த சாதனையை நிகழ்த்த கடந்த ஓராண்டில் கவுதம் அதானி தினமும் 1600 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக தற்போது உள்ளது.

தற்போது உலகின் 2ஆவது பெரும் பணக்காரராக விளங்கும் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் 2 மடங்குக்கும் மேல் அதிகமாகியுள்ளது.

அசுர வளர்ச்சி

கடந்த ஐந்து ஆண்டுகளில், விமான நிலையங்கள், சிமென்ட், காப்பர் சுத்திகரிப்பு, தரவு மையங்கள், பசுமை ஹைட்ரஜன், பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு, சாலைகள் மற்றும் சூரிய மின்கல உற்பத்தி உள்ளிட்ட புதிய வளர்ச்சித் துறைகளில் அதானி எண்டர்பிரைசஸ் அதிக முதலீடு செய்துள்ளது.

அதானி குழுமம், தொலைத்தொடர்பு துறையில் தடத்தை பதிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. மேலும், பசுமை ஹைட்ரஜன் மற்றும் விமான நிலைய வணிகங்களை மேம்படுத்துவதற்கான பாரிய திட்டங்களையும் கொண்டுள்ளது. அதானி குழுமம் பசுமை எரிசக்தி உள்கட்டமைப்பிற்காக 70 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான அதானி, 2022ல் மட்டும் தனது சொத்தை 60 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளார். மற்ற பணக்காரர்களை விட ஐந்து மடங்கு அதிகம். பிப்ரவரியில் அம்பானியை முந்திச் சென்று, ஏப்ரலில் செண்டிபில்லியனர் (நிகர சொத்து $100 பில்லியன் அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள்) ஆக உருவெடுத்தார்.

இதற்கிடையில், ஜூன் 24 அன்று அவரது 60ஆவது பிறந்தநாளில், அதானி சமூக சேவைக்காக 60,000 ரூபாய் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தார்.

அதானி சமீபத்தில் வாங்கிய நிறுவனங்கள்

ஊடகம்

ஆகஸ்ட் 23 அன்று, அதானி குழுமத்தின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் லிமிடெட் (ஏஎம்என்எல்), விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (விசிபிஎல்) நிறுவனம் மூலம் என்டிடிவியை தொடங்கிய ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் (ஆர்ஆர்பிஆர்) நிறுவனத்தின் 99.99% பங்குகளை வாங்குவதற்கான செயல்முறையைத் தொடங்கியதாக அறிவித்தது. NDTVயில் 26% பங்குகள் வரை பெறுவதற்கான திறந்த சலுகையில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், என்டிடிவி தனது ஒப்புதல் கோரப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

சிமென்ட் 

மே மாதத்தில், ஹொல்சிம் ஏஜியின் சிமென்ட் நிறுவனத்தை 10.5 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக அதானி குழுமம் அறிவித்தது. அதானியின் மிகப்பெரிய கையகப்படுத்தல் நடவடிக்கை இதுவாகும்.

மின்சாரம்

ஆகஸ்ட் 19 அன்று, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல் மின் உற்பத்தியாளரான அதானி பவர், அனல் மின் நிலைய ஆபரேட்டரான டிபி பவரை ரூ.7,017 கோடி நிறுவன மதிப்புக்கு வாங்குவதாகக் அறிவிப்பு வெளியிட்டது.

துறைமுகம்

ஜூலை மத்தியில், இஸ்ரேல் தனது மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக மையமான ஹைஃபா துறைமுகத்தை அதானி துறைமுகங்கள் மற்றும் உள்ளூர் இரசாயனங்கள் மற்றும் தளவாடக் குழுவான கடோட்டிற்கு 1.18 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதாக அறிவித்தது.

சாலை உள்கட்டமைப்பு 

இந்த மாத தொடக்கத்தில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள Macquarie Asia Infrastructure Fundஇன் இந்தியா சுங்க சாலைகளை ரூ.3,110 கோடிக்கு வாங்கும் என தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget