மேலும் அறிய

Ford India : மூடப்படும் ஃபோர்டு நிறுவனம்: 40,000 பேர் வேலை இழப்பு - ஆட்டோமொபைல் டீலர் கூட்டமைப்பு!

ஃபிரான்சைசிஸ் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 170 டீலர்களை கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர் என்று  ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA)  தெரிவித்துள்ளது. 

வாகன உற்பத்தியில் சுமார் 2,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை டீலர்கள் செய்துள்ளனர். குறைந்தது 40,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தது. 

ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 

ஃபோர்டு நிறுவன ஆலைகள் மூடப்பட்டதால் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு நிறுவனம் மூடப்படவுள்ளதால், அதில் பணிபுரியும் தமிழர்கள் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மெக்ஸிகோ, பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளைப் போன்று இந்தியாவில் ஆட்டோ மொபைல் டிலர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை.  ஃபிரான்சைசிஸ் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவா் வின்கேஷ் குலாட்டி கூறுகையில், " இந்த அறிவிப்பு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது.  வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வாகன சேவையை வழங்கும் டீலர்களுக்குக் குறித்த நேரத்தில் போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்று ஃபோர்டு இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அனுராக் மெஹ்ரோத்ரா உறுதியளித்துள்ளார். 

இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், இத்தருணத்தில் இது  போதுமானதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுமார் 170 டீலர்கள், 391 விற்பனை நிலையங்களின் மூலம்  ரூபாய்.2000 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். ஃபோர்டு இந்தியா 4,000 பேரைத் தான் பணியில் அமர்த்தியது. இந்த டீலர்கள் சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பைகளை உருவாக்கியிருந்தனர்" என்று தெரிவித்தார்.  

Ford India : மூடப்படும் ஃபோர்டு நிறுவனம்: 40,000 பேர் வேலை இழப்பு - ஆட்டோமொபைல் டீலர் கூட்டமைப்பு!

முன்னதாக,கடந்தாண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்ற நிலைல் குழு, தனது அறிக்கையில், நாட்டின் ஆட்டோமொபைல் விற்பனையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் கனரகத் தொழில்துறை அமைச்சகம், ஃபிரான்சைசிஸ் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. 

கடந்த ஆண்டு ஃபோர்டு நிறுவனம் மீண்டும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டாக கார் தயாரிப்பில் ஈடுபடும் முயற்சியில் இறங்கியது. எனினும், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக, இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. உற்பத்தியில் இருந்து வெளியேறினாலும், கார்களை முழுவதுமாகவும், பாகங்களாகவும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் இந்த முடிவால் ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றிய 4000 தொழிலாளர்கள் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது. 

மேலும், வாசிக்க: 

Ford India: 1926 முதல் 2021 வரை.. சொகுசுக்காரன்... பவுசுக்காரன்... இது ஃபோர்டு வீழ்ந்த கதை!

Ford Cars in India: இழுத்து மூடுகிறது ஃபோர்டு... 2 ஆயிரம் சென்னை தொழிலாளர்கள் நிலை? கடும் நஷ்டம் என முடிவு! 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
2161 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 - ஏன் தெரியுமா? முழு விபரம் உள்ளே...!
2161 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 - ஏன் தெரியுமா? முழு விபரம் உள்ளே...!
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
Embed widget