மேலும் அறிய

"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!

அறவழியில் மக்களை சந்தித்த தவெகவினரை கைது செய்வது தான் ஜனநாயகமா? என அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை அக்கட்சியினர் பொதுமக்களிடம் விநியோகம் செய்தபோது, காவல்துறை அவர்களை கைது செய்தது. இதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கண்டனம் தெரிவித்த விஜய்:

இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது.

அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இதுதான் ஜனநாயகமா?

இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர்.

ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: Teachers Protest: மார்ச் 7-ல் கோட்டை முற்றுகை: டிட்டோஜேக் தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Trump Vs Hamas: பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கைStudents with PMK Flag : ஆண்டு விழாவா?கட்சிக்கூட்டமா?பாமக துண்டுடன் மாணவர்கள் சாதி பாடலுக்கு நடனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Trump Vs Hamas: பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Embed widget