Ford Cars in India: இழுத்து மூடுகிறது ஃபோர்டு... 2 ஆயிரம் சென்னை தொழிலாளர்கள் நிலை? கடும் நஷ்டம் என முடிவு!
ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் தனது ஆலைகளை மூட முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மறைமலைநகர், குஜராத்தில் உள்ள சனணட் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள வாகன உற்பத்தி ஆலைகளை மூட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு புதிய மாடல் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்தும் நஷ்டமே ஏற்பட்டு வருவதாகவும், இதனால் சுமார் 2 பில்லியன் டாலர் அளவில் நஷ்டம் உள்ளிட்ட பிரச்னை காரணமாகவும் ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் தொடர அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு நிறுவன ஆலைகள் மூடப்பட்டதால் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு நிறுவனம் மூடப்படவுள்ளதால், அதில் பணிபுரியும் தமிழர்கள் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Ford India will cease manufacturing vehicles for sale in India immediately; manufacturing of vehicles for export will wind down at Sanand vehicle assembly plant by Q4 2021, and Chennai engine and vehicle assembly plants by Q2 2022: Ford India
— ANI (@ANI) September 9, 2021
Ford India will restructure its operations with plans to significantly expand its Chennai-based Ford Business Solutions team and bring to market some of Ford’s iconic global vehicles and electrified SUVs while ceasing vehicle manufacturing in India: Ford India
— ANI (@ANI) September 9, 2021
ஃபோர்டு சென்னை ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஆலை மூடல் குறித்து கூறுகையில், ஆலைகள் மூடப்படுவது குறித்து இன்று பிற்பகல் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், மொத்த செட்டீல்மெண்ட் குறித்த பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் விவாதிக்கப்படும் என்று தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். சென்னை ஆலையில் 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.