Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி பல மோசமான சாதனைகளை படைத்துள்ளது
இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் அவரது பயிற்சியின் இந்திய அணி சந்தித்துள்ள சில மோசமான சாதனகளை இதில் காண்போம்.
இதையும் படிங்க: Ind vs Aus BGT 2024 : இரண்டு சர்ச்சை முடிவுகள்! டிஆர்எஸ் இருந்து பயனில்லை... விமர்சனம் செய்யும் ரசிகர்கள்
ஒரு திரைப்படத்தில் படத்தின் முதல் பாதி விறுப்பாகவும், இரண்டாம் பாதி சுமாராகவும் இருப்பது போலவே இந்திய கிரிக்கெட் அணிக்கும் அப்படி தான் அமைந்தது இந்த ஆண்டு, ஆண்டின் முதல் பாதியில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை டிரா செய்தது, அதன் பின்னர் டி20 உலகக்கோப்பையை வெற்றி பெற்றது என இந்த ஆண்டின் முதல் பாதி இந்திய அணிக்கு நல்லப்படியாக அமைந்தது. ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணிக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது.
மோசமான சாதனைகள்:
கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்தியா படைத்த மோசமான சாதனைகள் பட்டியல் பினவருமாறு:
- 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது.
- 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாமல் இருந்தது இந்த ஆண்டில் தான்.
- இந்தியா தனது சொந்த மண்ணில் இதுவரை இல்லாத வகையில் குறைந்த டெஸ்ட் ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆனது (46 ரன்கள்) மற்றும் ஆசியாவில் ஒரு அணியின் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது.
- 19 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூருவில் நடந்த டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
- 6 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான சொந்த டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
- இந்தியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.
- 12 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் நடந்த டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
- 24 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் செய்யப்பட்டது.
- 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் 4 டெஸ்ட் போட்டிகளில்சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்தது
- 10 ஆண்டுகளுக்குப் பிறகு BGT தொடரில் 2 போட்டிகளில் தோல்வியடைந்தது
- 13 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்னில் இந்தியா ஒரு டெஸ்டில் தோல்வியடைந்தது
இப்படி கம்பீர் பயிற்சியாளராக வந்ததில் இருந்து இந்திய அணிக்கு ஒரு போதாத காலம் என்றே கூறலாம். தன் மீதும் இந்திய அணி மீதும் விழுந்துள்ள கரும்புள்ளியை கம்பீர் எவ்வாறு நீக்க போகிறார் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.