Bussy Anand arrest: புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE! காரணம் என்ன?
தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களுக்குள், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து கைப்பட கடிதம் எழுதி வெளியிட்டார் தவெக தலைவர் விஜய். யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே. பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் என கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியையும் நேரில் சந்தித்து மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து மனு கொடுத்தார். விஜய் எழுதிய கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு தவெகவினர் போராட்டத்தில் இறங்கினர். அந்தவகையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் விஜய் எழுதிய கடித்தத்தை துண்டு பிரசுரமாக பொது மக்களுக்கு கொடுத்து வந்தார். காவல்துறை அனுமதி இல்லாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்த காரணத்திற்காக அங்கேயே வைத்து புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மோசமாகி விட்டதை கண்டித்ததால் தான் விஜய்க்கு எதிராக இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாக சொல்லி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.