மேலும் அறிய

Egg Price Hike: முட்டை விலை அதிரடி உயர்வு... கத்தாரால் வியாபாரிகள் கவலை

கத்தார் நாடு 60 கிராம் எடைக்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே, இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளதால் முட்டை வியாபாரிகள் கவலை.

நாமக்கல் மண்டலத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. தமிழகம், கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் தினமும் லாரிகள் மூலம் நாமக்கல்லில் இருந்து சுமார் 4 கோடி முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு வாரம் 4 கோடி முட்டைகள் செல்கிறது. வெளி நாடுகளுக்கு தினமும் 25 லட்சம் முட்டைகள் கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் உற்பத்தியாகும் 52 கிராம் எடை கொண்ட பெரிய முட்டைக்கு என்இசிசி (தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு) தினமும் விலை நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி மாலை, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ₹5.90 ஆக நிர்ணயம் செய்தார்.

நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில இதுவே அதிக பட்ச விலையாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஒரு முட்டையின் விலை ரூ. 585 காசாக இருந்தது. அதற்கு பின்பு கடந்த 3 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் முட்டையின் விலை ரூ.585 காசாக இருந்தது. அதன் பின்னர், கடந்த ஐந்து நாட்களாக முட்டையின் பண்ணை கொள் முதல் விலை 590 காசாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Egg Price Hike: முட்டை விலை அதிரடி உயர்வு... கத்தாரால் வியாபாரிகள் கவலை

இதன் காரணமாக, கத்தார் நாடு 60 கிராம் எடைக்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே, இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால், நாமக்கல் பகுதியில் இருந்து கத்தார் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில், கடந்த 4 ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 590 காசாக என்இசிசி அறிவித்தது. இந்த விலை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து வருகிறது. முட்டை விலை உயர்வால் தமிழகத்தில் உள்ள கோழிபண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள், முட்டையின் விலை வரலாறு காணாத உயர்வு மற்றும் கத்தார் நாட்டின் புதிய ஏற்றுமதி கொள்கை போன்றவற்றால் சற்று பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய கொள்கையால், கடந்த மாதம் முதல், கத்தார் நாட்டுக்கு குறைவான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முட்டை விலை உயர்வால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் அதிக விலை கொடுத்து ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். நாமக்கல் பகுதியில் 20க்கும் மேற்பட்ட முட்டை ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளதால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Embed widget