BSNL Recharge: 52 GB நெட்! 2 மாசத்துக்கு அன்லிமிடேட் கால்! BSNL அசத்தல் ப்ளான் எவ்வளவு?
பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களை கவர தினசரி 1 ஜிபி, அன்லிமிடெட் கால்கள் என பல அம்சங்கள் கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதள சேவையாக பி.எஸ்.என்.எல். உள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தொலைபேசி வழி இணைப்புகளையும், அலைபேசிகளுக்கான சிம்கார்டு இணைப்புகளையும் வழங்கி வருகிறது.
பி.எஸ்.என்.எல்.-லின் புதிய திட்டம்:
மற்ற நிறுவனங்களை காட்டிலும் பி.எஸ்.என்.எல்.-லில் கட்டணங்கள் மிகவும் குறைவு ஆகும். இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 298க்கு சுமார் 2 மாத காலத்திற்கு இந்த திட்டம் அமலில் இருக்கும் வகையில் அமல்படுத்தியுள்ளது.
- 52 நாட்களுக்கு பயன்படும் வகையில் ரூபாய் 298 மதிப்பில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் 52 நாட்களுக்கு எத்தனை அழைப்புகள் வேண்டுமானாலும் தடையின்றி கட்டணமின்றி பேசிக் கொள்ளலாம்.
- தினசரி 100 இலவச குறுஞ்செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.
- இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு 1 GB இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
- மொத்தம் 52 நாட்களுக்கு 52 GB இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இணைய சேவையானது நல்ல வேகத்தில் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தினசரி 2 GB திட்டம்:
மேலும், அதிகளவு இணையம் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பும் பயனாளர்கள் பி.எஸ்.என்.எல்.-லின் ரூபாய் 249 திட்டத்தை உபயோகிக்கலாம். 45 நாட்கள் பயன்படும் வகையிலான இந்த திட்டத்தின் கீழ் தினசரி 2 GB பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பலரும் தனியார் இணைய மற்றும் அழைப்பு சேவை நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோனையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜியோ தனது இணைய சேவை மற்றும் அழைப்பு கட்டணத்தை உயர்த்தியது. ஜியோ தனது கட்டணத்தை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் தனது கட்டணத்தை உயர்த்தியது. இதன் காரணமாக பலரும் பி.எஸ்.என்.எல்.க்கு மாறி வருகின்றனர்.
தனது வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல். பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.