![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Salary Hike: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சராசரியாக 9% ஊதிய உயர்வு இருக்கும்: அறிக்கை !
இந்தியாவில் இந்தாண்டு ஊதிய உயர்வு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
![Salary Hike: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சராசரியாக 9% ஊதிய உயர்வு இருக்கும்: அறிக்கை ! Average Salary Hike In India Likely To Be 9 Per Cent In 2022: Michal Page Report Salary Hike: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சராசரியாக 9% ஊதிய உயர்வு இருக்கும்: அறிக்கை !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/07/38008ac1b43f1330bf5707b914554186_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நபர்களின் ஊதிய உயர்வு சுமார் 9 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊதிய உயர்வு தொடர்பாக மைக்கேல் பேஜ் ஊதிய அறிக்கை 2022 என்ற அறிக்கை வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மைக்கேல் பேஜ் என்ற நிறுவனம் ஒரு ஆய்வை செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சில முக்கியமான தரவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஊதிய உயர்வு இந்தாண்டு 8-12 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 2022ஆம் ஆண்டு இந்தியாவில் தனியார் ஊழியர்களின் ஊதிய உயர்வு 9% இருக்கும். இது 2019ஆம் ஆண்டு இருந்த 7% உயர்வை விட மிகவும் அதிகமானது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு வங்கிகள், நிதி சேவைகள், உற்பத்தி மற்றும் தொழில்கள் உள்ளிட்ட துறைகளில் நல்ல வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் இ-வர்த்தக துறை காரணமாக கணினி சார்ந்த தொழிலாளர்களுக்கு நல்ல ஊதிய உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில துறைகள் 12 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர தரவுகளை வைத்து ஆய்வு செய்யும் பணிகள், வேப் டெவலப்பிங், கிளவுடு சார்ந்த பணிகளுக்கு நிறையே தேவைகள் ஏற்படும் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் உள்ள ஊழியர்களுக்கு சராசரியாக ஊதியம் மிகவும் அதிகமாக உயரும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் நபர்களை தக்கவைக்க அதிகளவில் முயற்சி செய்யும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி சிறப்பாக வேலை செய்யும் நபர்களுக்கு அதிகளவில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில் ஒரு சில துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊதிய உயர்வு தொடர்பாக வெளியான இந்த அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:மீண்டும் மீண்டும் ஏற்றம்காணும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)