Apple Update: சென்னையில் ஏப்ரல் மாதம் முதல் Apple ஐஃபோன் 13 தயாரிப்பு.. முழு விவரம் இங்கே இருக்கு..
சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆப்பிள் நிறுவனத்தில் ஐபோன்13 தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய மற்றும் புகழ்பறெ்ற செல்போன் நிறுவனமாக விளங்கி வருவது ஆப்பிள். இந்த நிறுவனத்தின் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களுக்கு என்று உலகம் முழுவதும் தனி மவுசு உள்ளது. சென்னையை அடுத்து அமைந்துள்ளது ஸ்ரீபெரும்புதூர். இங்குள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் செல்போன்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் 13 நிறுவனத்தின் புதிய தயாரிப்பு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இந்த பணி தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் 13 இந்தியாவில் 7 மாதங்களுக்கு பிறகு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள இந்த பாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் படைப்பான ஆப்பிள் 13 கடந்த ஜனவரி மாதமே தொடங்கப்பட வேண்டியது. ஆனால், டிசம்பர் மாதம் பாக்ஸ்கான் ஆலையில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் பெண்கள் உள்பட பலரும் சாலைமறியலில் ஈடுபட்ட விவகாரத்தில் இந்த பணி தாமதம் ஆனது.
இந்த ஆப்பிள் ஐபோன் 13 மாடலை இந்தியாவிலே அதிக விற்பனையான ஆப்பிள் ஐபோன் மாடலாக்கவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேசமயத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய புதிய மாடல்களை உருவாக்குவது பற்றி எந்த திட்டமுமல் இல்லை என்று கூறியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஐபோன் 12 மற்றும் ஐபோன் 11 ஆகிய மாடல்கள் இந்தியாவில் நல்ல விற்பனையானது. இந்த மொபைல் போன்கள் பாக்ஸ்கான் ஆலையிலும், பெங்களூரில் உள்ள விஸ்ட்ரோன் ஆலையிலும் தயாரிக்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் ஐபோன்களில் 70 சதவீதத்தை இந்தியாவிலே விற்பனை செய்கிறது.
ஆப்பிள் இந்தியா நிறுவனம் தங்களது வருவாயை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 68 சதவீதம் அளவிற்கு உயர்த்தியுள்ளது.
மேலும் படிக்க : Google Chrome: இனி கூகுள் குரோமை ஹேக் செய்யவே முடியாதா? குரோமின் பாதுகாப்பை விளக்கும் கூகுள்!
மேலும் படிக்க : YouTube Vanced: ப்ரீமியமும் இல்லை.. விளம்பரமே இல்லாமல் யூடியூப்..! மிரட்டிய கூகுளால் கடையை மூடிய ஆப்!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்