Gold Rate 9th May: போர் பதற்றத்திற்கு நடுவே அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா.?
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய விலை என்ன.? பார்க்கலாம்...

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 920 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.
ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை
கடந்த 4-ம் தேதி, சவரன் 70,040 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, 5-ம் தேதி அதிரடியாக 1,160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 71,200 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 8,900 ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த நாளும் இன்னும் அதிரடியாக சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 72,800 ரூபாயாக விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 9,100 ரூபாயாக உயர்ந்தது.
7-ம் தேதி சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 72,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9,075 ரூபாயாகவும் விற்பனையானது. தொடர்ந்து, 8-ம் தேதியான நேற்று, சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 73 ஆயிரத்தை கடந்து, 73,040 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 9,130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை
இந்நிலையில், இன்று(09.05.25) தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 72,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 115 ரூபாய் குறைந்து 9,015 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர்ந்து, 6-ம் தேதி கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்து 111 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 7-ம் தேதியும் அதே விலையில் விற்பனையானது.
பின்னர் 8-ம் தேதியான நேற்று கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று விலையில் மாற்றமின்றி, கிராம் அதே 110 ரூபாயாக உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால், தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருப்பதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று இரு நாடுகளுக்கிடையே தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





















