Aadhar-Pan: இன்னும் ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா? அடுத்த மாதம் முதல் இந்த அபராதம்..
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு அபராதம் இரட்டிப்பாக உள்ளது.
மத்திய அரசு 2020 ஆண்டு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. எனினும் நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடு வரும் 2023 மார் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைத்தால் அதற்கு அபராதம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும். தற்போது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பவர்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அந்தத் தொகை அடுத்த மாதம் முதல் இரட்டிப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த மாதத்திற்குள் விரைவில் பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டுவது மிகவும் அவசியமான ஒன்றாக அமைந்துள்ளது.
எப்படி பான்-ஆதார் கார்டுகளை இணைக்க முடியும்?
முதலில் வருமானவரி செலுத்தும் இணையதளத்திற்கு https://incometaxindiaefiling.gov.in/ செல்ல வேண்டும். அங்கு உங்களுடைய பான் கார்டு எண்ணை வைத்து உள் நுழைய வேண்டும். அதன்பின்னர் ஆதார்-பான் இணைப்பு என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்களுடைய ஆதார் எண்ணை பதிவிட்டு இணைக்க வேண்டும்.
எதற்காக இணைக்க வேண்டும்?
வருமானவரித்துறையின் தரவுகளின்படி பல போலியான பான் கார்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை கண்டறிய வருமானவரித்துறை பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைக்க திட்டமிட்டது. அதன்படி பான்கார்டு உடன் ஆதார் கார்டு இணைக்கபடவில்லை என்றால் அந்த பான் கார்டு செல்லாமல் போகும் என்ற முடிவை வருமான வரித்துறை எடுத்துள்ளது. ஒரு குறிப்பிட அளவிற்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் போது பான் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். எனவே இந்த முறை மூலம் அதையும் வருமான வரித்துறை கண்காணிக்க திட்டமிட்டது. ஆகவே பான் கார்டு உடன் ஆதாரை இணை வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்