(Source: ECI/ABP News/ABP Majha)
Tata Funded Start-Ups | இந்த நிறுவனத்துக்கெல்லாம் டாடாதான் தொடக்கப்புள்ளி.! மாஸ் காட்டும் 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!
2021 டிசம்பர் 28ல், ரத்தன் டாடாவுக்கு வயது 84 ஆனது. ரத்தன் டாடா இந்தியாவின் பெரும் பணக்காரர் மட்டுமல்ல பெருந்தன்மையானவரும் என சொல்லப்படுகிறது.
2021 டிசம்பர் 28ல், ரத்தன் டாடாவுக்கு வயது 84 ஆனது. ரத்தன் டாடா இந்தியாவின் பெரும் பணக்காரர் மட்டுமல்ல பெருந்தன்மை உள்ளவர். அவரால் பலருக்கும் உதவிகள் நீண்டு கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், டாடா குழுமத்தின் சார்பில் பல்வேறு ஸ்டார்ட் அப் தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவற்றில் சிலவற்றைப் பற்றி அறிவோம்.
1. ஓலா எலக்ட்ரிக்:
2019ல் டாடா நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் முதலீடு செய்தது. எவ்வளவு முதலீடு என்பது மட்டும் இதுவரை ரகசியாக உள்ளது. ஏஎன்ஐ டெக்னாலஜிஸில் தான் முதன்முதலில் டாடா முதலீடு செய்தது. அது ஓலாவின் தாய் நிறுவனம்.
டாடா முதலீடு செய்துள்ளதால் நிறுவனத்திற்கு நல்லதொரு முன்னுதாரணம் கிடைத்துள்ளது. எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் எங்களில் இலக்குகளுக்கு இந்த முதலீடு தான் உத்வேகம் இவ்வாறு ஓலா எலக்ட்ரி ஆரம்பித்தில் தெரிவித்தது.
2. பேடிஎம்
2015 மார்ச்சில் டாடா நிறுவனம் பேடிஎம்மில் முதலீடு செய்தது. முதலில் பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 (One97)க்கு நிதி திரட்ட டாடா உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2021, நவம்பர் 8 ஆம் தேதி One97 ரூ.18,300 கோடியை ஐபிஓ விற்பனை மூலம் திரட்டியது. இதற்கு விதித்திடவர் ரத்தன் டாடா.
3. ஸ்நாப்டீல்
ஸ்நாப்டீல் என்ற இ வர்த்தக நிறுவனத்தில் டாடா முதலீடு செய்தார். ரத்தன் டாடாவின் முதல் இ வர்த்தக முதலீடு இதுதான். ஆரம்பத்தில், அதாவது ஆகஸ்ட் 2014ல் ரத்தன் டாடா இந்நிறுவனத்தில் ரூ.5 கோடி முதலீடு செய்தார். அதன்பின்னர் அந்த நிறுவனத்தில் டாடா 0.17% ஸ்டேக் கொண்டிருந்தது. ஸ்நாப்டீலில் டாடா முதலீடு செய்தவுடன். ஃப்ளிப்கார்ட் மின்த்ராவை கையில் எடுத்தது. ஸ்நாப்டீலினி 256 பங்குகளை ஏஞ்சல் முதலீட்ட்டாளர்கள் மூலம் டாடா பெறச்செய்தார்.
4. கார் தேக்கோ
கார்தேக்கோவில் டாடா குழுமத்தின் முதலீடு எவ்வளவு என்று தெரிவிக்கப்படாவிட்டாலும் கூட அதன் தாய் நிறுவனமான கிர்னார்சாஃப்ட்டுக்குமே டாடா முதலீடு செய்துள்ளார். பின்னர் கார்தேக்கோ, பைக்தேக்கோ, ஃப்ரைஸ்தேக்கோ நிறுவனங்களில் அவர் முதலீடு செய்தார்.
5. கல்ட் ஃபிட்
கல்ட் ஃபிட் என்ற ஹெல்த் அண்ட் ஃபிட்னஸ் ஆன்லைன் போர்டலிலும் டாடா முதலீடு செய்துள்ளார். இதில் அந்நிறுவனம் வெற்றி காணவே இப்போது ஈட் ஃபிட், கேர் ஃபிட், மைண்ட் ஃபிட் எனப் பல தளங்களை க்யூர்.ஃபிட் தொடங்கியுள்ளது.
6. அர்பன் லேடர்
அர்பன் லேடர் என்பது ஆன்லைனில் மரச்சாமான்கள் விற்கும் தளம். பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டது. நவம்பர் 2015ல் இந்த அமைப்பில் டாடா முதலீடு செய்தார். ஸ்நாப் டீலுக்கு அடுத்தபடியாக டாடா முதலீடு செய்த 2வது இ காமர்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம் இது. 2020ல் அர்பன் லேடரில் 96% பங்குகளை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ரூ.182 கோடிக்கு வாங்கியது.
7. ஜிவாமே
ஜிவாமே என்பது ஆன்லைன் உள்ளாடைகள் விற்பனையகம். ரிச்சா கார். கபில் கரேகர் 2011ல் இதனைத் தொடங்கினர். 2015 செப்டம்பரில் ரத்தன் டாடா, ஜிவாமே நிறுவனத்தில் முதலீடு செய்தார். துரதிர்ஷ்டவசமாக, இதில் டாடாவின் முதலீடு எவ்வளவு என்ற தகவல் நமக்கில்லை.
8. அர்பன் கம்பெனி
அர்பன் கம்பெனி என்பது முதலில் அர்பன் க்ளாப் என்ற பெயரில் இயங்கியது. இதில் 2015 ஆம் ஆண்டு ரத்தன் டாடா முதலீடு செய்தார். இது குர்கானை தலைமையிடமாகக் கொண்ட வீடு தேடி சேவை தரும் கம்பெனி.
9. ஆப்ரா
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் ஆர்பாவில் முதலீடு செய்தது. இது ஒரு பிட்காயின் ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இணையத்தில் வாடிக்கையாளர்கள் மெய்நிகர் சொத்தை சேர்க்கலாம். வாடிக்கையாளர்கள் இந்தத் தளத்தின் வாயிலாக வாங்கும்போதும் விற்கும்போதும் இவர்களுக்குப் பணம் கிடைக்கிறது.
10. லென்ஸ்கார்ட்
ஏப்ரல் 2016ல், ரத்தன் டாடா லென்ஸ்கார்டில் முதலீடு செய்தார். சன் க்ளாஸ், ஐ க்ளாஸ், கான்டாக்ட் லென்ஸ் விற்பனையகமான லென்ஸ்கார்டில் டாடா முதலீடு செய்துள்ளார். ஆனால் இதில் நிதியை விட தொழில் ஆலோசனையாகவே டாடா அதிகம் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.