யமஹானாலே அசத்தல்.. ஸ்டைல், கிளாஸ், மாஸ் காட்டும் Yamaha Ray ZR 125 - என்ன ஸ்பெஷல்?
Yamaha Ray ZR 125 ஸ்கூட்டரின் சிறப்பம்சம் என்ன? அதன் விலை, மைலேஜ் எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

டிவிஎஸ், ஹோண்டா, ஹீரோ ஆகிய நிறுவனங்கள் இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தினாலும் தனக்கென தனி செல்வாக்குடன் இந்திய சந்தையில் உலா வருவது யமஹா நிறுவனம். யமஹா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் தனி பட்டாளமே உள்ளனர்.
Yamaha Ray ZR 125
பைக் மட்டுமின்றி ஸ்கூட்டர் தயாரிப்பிலும் யமஹா முன்னணியில் உள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட யமஹா நிறுவனத்தின் Yamaha Ray ZR 125 ஸ்கூட்டரின் விலை, சிறப்பம்சம் போன்றவற்றை கீழே விரிவாக காணலாம்.
125 சிசி எஞ்ஜின்:
இந்த Yamaha Ray ZR 125 ஸ்கூட்டர் மொத்தம் 4 வேரியண்ட்களில் உள்ளது. அதுாவது Yamaha Ray ZR 125 Drum Hybrid, Ray ZR 125 Disc, Ray ZR 125 Disc - Racing Blue and Dark Matte Blue மற்றும் Ray ZR 125 Street Rally - Hybrid ஆகும். இந்த 4 வேரியண்ட்கள் உள்ளது. மொத்தம் 12 நிறங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது. பிஎஸ்6 ரக எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த Yamaha Ray ZR 125 ஸ்கூட்டரில் 125 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் இந்த ஸ்கூட்டர் மிகவும் ஸ்டைலாகவும், மாடர்னாகவும் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மைலேஜ் எப்படி?
இந்த ஸ்கூட்டர் ஏர்கூல்ட் மோட்டார் 8.04 பிஎச்பி ஆற்றலையும், 10.03 என்எம் டார்க் இழுதிறன் ஆற்றலையும் கொண்டது. இதில் உள்ள ஹைப்ரிட் எஞ்ஜின் பேட்டரியுடன் இணைந்து 16 சதவீதம் கூடுதலாக மைலேஜ் தருகிறது. டார்க் இழுதிறன் சக்தியும் அதிகரிக்கிறது. இது ப்ளூடூத் வசதியுடன் செல்போனை இணைத்துக் கொள்ளும் வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது 49 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. Yamaha Ray ZR 125 மொத்த எடை 100 கிலோ ஆகும். இதன் பெட்ரோல் டேங்க் 5.2 லிட்டர் பெட்ரோல் தாங்கும் ஆற்றல் கொண்டது.
இதன் விலை என்ன?
Ray ZR 125 Drum - Hybrid - ரூ. 1.01 லட்சம்
Ray ZR 125 Disc - ரூ.1.09 லட்சம்
Ray ZR 125 Disc - Racing Blue and Dark Matte Blue - ரூ.1.10 லட்சம்
Ray ZR 125 Street Rally - Hybrid - ரூ.1.15 லட்சம்
சிறப்பம்சம்:
இதில் அடிப்படை மாடலான Ray ZR 125 Drum - Hybridல் மட்டும் செல்போனை இணைத்துக் கொள்ளும் ப்ளூடூத் வசதி இல்லை. மற்ற 3 வேரியண்ட்களிலும் உள்ளது. இதில் Ray ZR 125 Disc மற்றும் Ray ZR 125 Disc - Racing Blue and Dark Matte Blue வேரியண்ட்களில் மட்டும் பொருட்களை வைத்துக் கொள்ளும் டிக்கி 24.4 லிட்டராக உள்ளது. மற்ற இரண்டு வேரியண்டகளில் 21 லிட்டராக டிக்கி வசதி உள்ளது.

சிவப்பு, நீலம், கருத்து, கருநீலம், சிவப்பு வெள்ளை, பச்சை ஆகிய வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் உள்ளது. 4 வேரியண்டகளிலும் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் உள்ளது. டிஸ்க், ட்ரம் ப்ரேக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் சக்கரங்கள் உள்ளது. இதன் 125 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இதன் பக்கபலமாக உள்ளது. கால் வைக்கும் இடம் மற்ற வாகனங்களை காட்டிலும் சற்று சிறியதாக இருப்பதாக வாகன ஓட்டிகளுக்கு சற்று சிரமமாக உள்ளது.
வேகத்தில் அசத்தல்:
மணிக்கு 80 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது இந்த Ray ZR 125 ஆகும். 90 கி.மீட்டர் வேகத்தை மிக எளிதாக எட்டிவிடும் ஆற்றல் கொண்டது. ஒரு முறை பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்பினால் 250 கி.மீட்டர் வரை தடையில்லாமல் பயணிக்கலாம். 2 வருடம் அல்லது 24 ஆயிரம் கி.மீட்டருக்கு வாரண்டி தருகின்றனர். செல்ஃப் ஸ்டார்ட் வசதி, கிக் வசதியும் உள்ளது.





















