Land Rover Defender: மான்ஸ்டரை மெருகேற்றும் லேண்ட் ரோவர்.. டிஃபெண்டரில் வரப்போகும் அப்டேட்கள், அறிமுகம் எப்போ?
Land Rover Defender MY2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட, டிஃபெண்டர் கார் மாடலை நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாம்.

Land Rover Defender MY2026: லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட, டிஃபெண்டர் கார் மாடலில் இடம்பெற உள்ள புதிய அம்சங்கள் தொடர்பான விவரங்களை இங்கே அறியலாம்.
அப்டேடட் டிஃபெண்டர் கார் - வெளிப்புற அப்டேட்கள்
லேண்ட் ரோவர் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட 2026 எடிஷன் டிஃபெண்டர் கார் மாடலை, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வெளிப்புறத்தில் புதிய எடிஷனானது, மறுவேலை செய்யப்பட்ட முன்புற பேனெட்டை கொண்டுள்ளது. இது வாகனத்திற்கு கூர்மையான தோற்றத்தை வழங்குகிறது. இதற்கு அழகு சேர்க்கும் விதமாக புதிய டெக்ஸ்ச்சர் பேனட் இன்செர்ட்டுகள், பக்கவாட்டு வென்ட் பேட்டர்ன்கள் மற்றும் 'டிஃபென்டர்' என்ற பேட்ஜுடன் கூடிய பளபளப்பான கருப்பு வீல் சென்டர் கேப்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்பக்கமாக நகரும்போது, ஹெட்லைட்கள் ஒளிரும் போது புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ்களை பெற்றுள்ளது. பின்புறத்தில், ஸ்மோக்ட் லென்ஸ்கள் கொண்ட ஃப்ளஷ்-மவுண்டட் விளக்குகளும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அப்டேடட் டிஃபெண்டர் - உட்புற மாற்றங்கள்
உட்புறத்தை கவனிக்கும்போது, V8 P425 வேரியண்டில் ஸ்லைடிங் மற்றும் ரிக்ளைனிங் இரண்டாவது வரிசை இருக்கை விருப்பத்துடன் கேபினின் பல்துறைத்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக நீட்டிக்கப்பட்ட ஆஃப்-ரோடு பயணங்கள் அல்லது குடும்ப பயணங்களின் போது கம்ஃபர்ட் நிலைகளை அதிகரிக்கிறது. ஒரு புதிய 13.1-இன்ச் டச்-ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்கள் தங்கள் விரல் நுனியில் பெரும்பாலான முக்கிய செயல்பாடுகளை நிர்வகிக்க வழி வகை செய்கிறது.
ஹெட்-அப்-டிஸ்பிளே கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்படும் சூழலில் 12.3 இன்ச் இண்டர் ஆக்டிவ் ட்ரைவர் டிஸ்பிளே வசதியும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு மேம்பாடுகளில் சோர்வு அல்லது கவனச்சிதறலின் அறிகுறிகளை அடையாளம் காணும், புதிய ஓட்டுநர் அட்டென்ஷன் மானிட்டர் கேமரா இடம்பெற்றுள்ளது.
அப்டேடட் டிஃபெண்டர் - சொகுசு அம்சங்கள்
2026 லேண்ட் ரோவர் டிஃபென்டரின் உட்புற வசதியை மேம்படுத்தும் விதமாக, கேபின் முழுவதும் இயற்கை வெளிச்சத்தைப் பரப்பும் ஆல்பைன் ரூஃப் லைட்களை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் தோல் அல்லது தோல் அல்லாத இருக்கை விருப்பங்களை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் புதிய மேட்கள், டோர் சீல்கள் மற்றும் லோட்ஸ்பேஸ் லைனர்கள் ஆஃப்-ரோடு உல்லாசப் பயணங்களுக்குப் பிறகு பராமரிப்பை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. இது பிரீமியம் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் சிறந்த கேபின் காற்றின் தரத்திற்கான CO₂ மேலாண்மை போன்ற அம்சங்களையும் அப்டேடட் டிஃபெண்டர் கார் பெற உள்ளது.
அப்டேடட் டிஃபெண்டர் - இன்ஜின் விவரங்கள்
2.0 லிட்டர் டர்போ மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல், 3.0 லிட்டர் டீசல் மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் 426hp மற்றும் 610 Nm டார்க் ஆற்றலை உருவாக்கும் அதிக சக்திவாய்ந்த 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் உள்ளிட்ட பல இன்ஜின் விருப்பங்கள் கிடைக்கின்றன. அனைத்து எடிஷன்களிலும் 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது.
அப்டேடட் டிஃபெண்டர் - விலை விவரங்கள்
இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் தற்போது மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி டிஃபென்டர் 90, 110 மற்றும் 130 என மூன்று வேரியண்ட்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். 110 X-Dynamic HSE வகையின் விலை சுமார் ரூ. 98 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி, டாப் எண்ட் வேரியண்டான OCTA எடிஷனின் ஒன்-னின் விலை ரூ. 2.60 கோடி வரை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி 2.0 வரி அடுக்கு காரணமாக இந்த காரின் விலை அண்மையில் ரூ. 18.6 லட்சம் வரை விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.





















