மேலும் அறிய

New Bikes: செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாக உள்ள புதிய பைக்குகளின் விவரங்கள்.. இம்புட்டு விலையா?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாக உள்ள புதிய பைக்குகள் எவை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாக உள்ள புதிய பைக்குகள் எவை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஆட்டோமொபைல் சந்தை:

சொகுசு பயணங்களுக்காக என்ன தான் எத்தனையோ விதமான கார்கள் அறிமுகமானாலும், இருசக்கர வாகனங்கள் என்பது இன்றளவும் பொதுமக்கள் வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. அதன் காரணமாக தான் தொடர்ந்து பல்வேறு இருசக்கர வாகனங்கள் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் Hero Karizma XMR , TVS X e-scooter , Honda SP160 , புதிய Ola S1 வரிசை மற்றும் Ducati Diavel V4 என பல்வேறு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் செப்டம்பர் மாதமும் சில முக்கிய இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார வாகனங்களும் அடங்கும்.

01. ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350:

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மோட்டார் சைக்கிளானது இதுவரை இல்லாத அளவிலான மறுசீரமைப்புடன் செப்டம்பர் 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய வாகனமானது கிளாசிக் 350-ஐ போன்ற தோற்ற வடிவமைப்பையும், ஜே சீரிஸ் இன்ஜினையும் கொண்டுள்ளது. டியூல் சேனல் ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட முதல் புல்லட்டாக ராய்ல் என்ஃபீல்ட் புல்லட் 350 மாடல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.7 வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

02. டிவிஎஸ் அபாச்சி ஆர்ஆர் 310:

டிவிஎஸ் நிறுவனம் தனது கூட்டாளியான பிஎம்டபள்யூ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள முதல் வாகனம் அபாச்சி ஆர்ஆர் 310. அதேநேரம், இது BMW நிறுவனத்தின் G 310 R மாடலை வெறும் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வாகனமாக மட்டுமே இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேக்ட் ஸ்ட்ரீட் பைட்டர் வெர்ஷன் பைக், வரும் செப்டம்பர் 6ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் விலை இந்திய சந்தையில் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

03. 2024 கேடிஎம்390 டியூக்

சோதனை ஓட்டத்தின்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து, இறுதியாக 2024 கேடிஎம் 390 டியூக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள புதிய 399சிசி இன்ஜின் 44.8எச்பி மற்றும் 39Nm டார்க் ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. இந்த பைக்கின் விலை இந்திய சந்தையில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 475 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

04. சுசுகி வி- ஸ்டோர்ம் 800DE

Suzuki V-Strom 800DE ஆனது கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இது  GSX-8S நேக்கட் பைக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட புதிய 776cc பேரலல்-ட்வின் இன்ஜின் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு புதிய வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.  V-Strom 650 XT போலல்லாமல், புதிய 800DE ஆனது நவீன எலக்ட்ரானிக்ஸ் சூட்டை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.11 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Hybrid 7 Seater: ஹைப்ரிட்டில் மூன்று 7 சீட்டர்கள்..! தென்கொரியா, ஃப்ரான்ஸ் மாடல்களின் விவரங்கள், விலை, அம்சம்
ஹைப்ரிட்டில் மூன்று 7 சீட்டர்கள்..! தென்கொரியா, ஃப்ரான்ஸ் மாடல்களின் விவரங்கள், விலை, அம்சம்
Skoda Offers: ரூபாய் 80 ஆயிரம் தள்ளுபடி.. தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த ஸ்கோடா! எந்த காருக்கு எவ்ளோ?
Skoda Offers: ரூபாய் 80 ஆயிரம் தள்ளுபடி.. தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த ஸ்கோடா! எந்த காருக்கு எவ்ளோ?
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
RC Book: வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Light House Bridge: கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
AC Train: நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
Embed widget