TVS Scooters: Jupiter முதல் Ntorq வரை.. டிவிஎஸ்-சில் எந்த ஸ்கூட்டர் எவ்வளவு விலை? மைலேஜ்? ஓர் அலசல்
டிவிஎஸ் நிறுவனத்தில் என்னென்ன ஸ்கூட்டர்கள் உள்ளது? அதன் மைலேஜ, விலை என்ன? என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனம் டிவிஎஸ். இந்த நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களே இந்திய சந்தையை பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பைக், ஸ்கூட்டர், மொபைட் என்று டிவிஎஸ் நிறுவனத்தின் வாகனங்கள் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை வாங்க விரும்பினால் எந்த ஸ்கூட்டர்? என்ன விலை? என்பதை கீழே காணலாம்.
1. TVS Ntorq 150:
இந்த TVS Ntorq 150 ஸ்கூட்டர் தற்போது பலராலும் விரும்பி வாங்கப்படுகிறது. இதன் எஞ்ஜின் திறன் 149.7 சிசி ஆகும். 7 ஆயிரம் ஆர்பிஎம் கொண்டது. 115 கிலோ எடை கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 400 ஆகும். இது 40 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
2. TVS Jupiter:
டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்பு இந்த TVS Jupiter ஆகும். இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இதை விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் 113.3 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6500 ஆர்பிஎம் கொண்டது. 106 கிலோ எடை கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 72 ஆயிரத்து 650 ஆகும். 58 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
3. TVS Ntorq 125:
இந்த TVS Ntorq 125 வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்று. இது 124.8 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 110 கிலோ எடை கொண்டது. 7 ஆயிரம் ஆர்பிஎம் கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 80 ஆயிரத்து 900 ஆகும். இதன் அப்டேட் வெர்சனே TVS Ntorq 150 ஆகும். இது 48.5 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
4. TVS Jupiter 125:
டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் முக்கியமானது TVS Jupiter 125 ஆகும். இது 108 கிலோ எடை கொண்டது. 124.76 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6500 ஆர்பிஎம் கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 75 ஆயிரத்து 950 ஆகும். இது 58 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
5. TVS Zest 110:
டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர் ரகத்தில் மற்றொரு படைப்பு இந்த TVS Zest 110 ஆகும். இது 103 கிலோ எடை கொண்டது. 109.7 சிசி திறன் கொண்டது ஆகும். 7500 ஆர்பிஎம் கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 70 ஆயிரத்து 850 ஆகும். இது 48 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு ஸ்கூட்டர்களும் இந்தியாவில் வெற்றி பெற்ற மாடலாகவே உள்ளது. பெண்கள், முதியவர்கள், இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.





















