மேலும் அறிய

TVS Jupiter 125: தரமோ தரம்.. டிவிஎஸ் ஜுபிடரை போட்டி போட்டு வாங்க காரணம் இதானா - விலை எவ்ளோ?

ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரும்பும் TVS Jupiter 125 விலை, அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் நம்பிக்கையான நிறுவனம் என்றால் வாடிக்கையாளர்களின் முதன்மைத் தேர்வாக இருப்பது டிவிஎஸ். டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டர், பைக் ஆகிய வடிவங்களில் இரு சக்கர வாகனங்களை காலத்திற்கு ஏற்ப வடிவமைத்து வருகிறது. 

ஜுபிடர் 125: 

அந்த வகையில் டிவிஎஸ்-சின் அற்புதமான படைப்பு ஜுபிடர் 125 ஆகும். இன்று இந்திய சாலைகளை அதிகளவு அலங்கரிக்கும் ஒரு ஸ்கூட்டராக இந்த டிவிஎஸ் ஜுபிடர் 125 உள்ளது. டிவிஎஸ் ஜுபிடர் Drum - Alloy, Disc, DT SXC மற்றும் SmartXonnect ஆகிய மாடல்களில் சந்தைகளில் விற்பனையாகி வருகிறது.

TVS Jupiter 125: தரமோ தரம்.. டிவிஎஸ் ஜுபிடரை போட்டி போட்டு வாங்க காரணம் இதானா - விலை எவ்ளோ?

பிஎஸ்6 - 2.0 ரக வாகனமான இந்த ஜுபிடர் 125 ஸ்கூட்டர் 113.3 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். முழுக்க முழுக்க பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. அலாய் சக்கரங்களை கொண்ட இந்த ஜுபிடர் 125 ட்யூப்லஸ் டயர்களை கொண்டது. செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் கிக் வசதி கொண்டது. 6 ஆயிரத்து 500 ஆர்பிஎம் இழுதிறன் வசதி கொண்டது. 50 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.  அதிகபட்சமாக மணிக்கு 82 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம்.

விலை என்ன?

சென்னையைப் பொறுத்தமட்டில் டிவிஎஸ் ஜுபிடர் 125யின் விலை என்ன? என்பதை கீழே காணலாம்.

Drum - Alloy - ரூபாய் 91 ஆயிரத்து 276

Disc - ரூபாய் 96 ஆயிரத்து 946

DT SXC - ரூபாய் 97 ஆயிரத்து 966

SmartXonnect - ரூபாய் 99 ஆயிரத்து 985 

மேலே கூறிய விலைகள் எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். ஆர்டிஓ பதிவு கட்டணம் உள்ளிட்டவை சேர்ந்து வரும்போது மேலும் இதன் விலை அதிகரிக்கும். இஎம்ஐ வசதியிலும் இந்த ஜுபிடர் 125 இரு சக்கர வாகனத்தை வாங்கலாம்.

என்னென்ன வசதிகள்?

அதிநவீன வசதி கொண்ட டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.   ப்ளூடூத் மூலமாக செல்போனை இணைத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. பொருட்கள் வைத்துக் கொள்ளும் டிக்கி 33 லிட்டர் வசதி கொண்டது. கூகுள் மேப் காட்டும் வசதியும் இந்த டிஸ்ப்ளேயில் உள்ளது. பெட்ரோல் குறைந்தால் எச்சரிக்கும் Low Fuel Warning Lamp இதில் உள்ளது.

டிஸ்க் மற்றும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 5.1 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் டேங்க் வசதியும் இதில் உள்ளது. சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் USB வசதியும் இதில் உள்ளது. செல்பாேன் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி வந்தால் நமக்கு தெரிவிக்கும் வசதியும் இதில் உள்ளது. 12 வாட் பேட்டரி இதில் உள்ளது.

TVS Jupiter 125: தரமோ தரம்.. டிவிஎஸ் ஜுபிடரை போட்டி போட்டு வாங்க காரணம் இதானா - விலை எவ்ளோ?

இந்த ஸ்கூட்டரை பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் விரும்பி ஓட்டுகின்றனர். ஏனென்றால், இது நகர்ப்புறங்களில் நெருக்கடியான சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் வேகமாக செல்வதற்கும் ஏற்ற வாகனமாக உள்ளது. நல்ல பிக் அப், நல்ல மைலேஜ், நல்ல கட்டமைப்பிற்காக வாடிக்கையாளர்கள் இதை விரும்புகின்றனர்.

ஜுபிடருக்கு போட்டியாக ஆக்டிவா, சுசுகி அஸஸ் போன்ற பல போட்டி நிறுவனங்கள் கடும் சவால் அளிக்கும் வகையில் இருந்தாலும் இதன் விற்பனை எந்த தடையும் இன்றி தொடர்ந்து அமோகமாக நடந்து வருகிறது. 
 
மேலும், டிவிஎஸ் நிறுவனத்தின் tvs ntorq, tvs raider 125, tvs sport, tvs zest 110, tvs ronin,  apache-ன் பல மாடல்கள் ஆகியவை சந்தையில் இருந்தாலும் ஜுபிடரை பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர். அதற்கு காரணம் இது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதும், கவர்ச்சிகரமாகவும், வசதியாகவும் இருப்பதே காரணம் ஆகும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Embed widget