Toyota Hilux | டொயோட்டா அறிமுகப்படுத்தும் புதிய பிக்கப் ட்ரக் `ஹிலக்ஸ்’.. இந்த மாடலில் என்ன ஸ்பெஷல்?
டொயோட்டா நிறுவனம் கடந்த ஜனவரி 20 அன்று ஹிலக்ஸ் பிக்கப் ட்ரக் மாடல் வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இதன் விலை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
டொயோட்டா நிறுவனம் கடந்த ஜனவரி 20 அன்று ஹிலக்ஸ் பிக்கப் ட்ரக் மாடல் வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இதன் விலை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மார்ச் மாதம் முழு விவரங்கள் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இதன் முன்பதிவு சமீபத்தில் தொடங்கியுள்ளது. டீசல் எஞ்சின் ஆப்ஷனைக் கொண்டிருக்கும் டொயோட்டா ஹிலக்ஸ் பிக்கப் வடிவத்தில் விற்கப்படும்.
டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் 2.8 லிட்டர் எஞ்சினையும், அதில் சுமார் 204 bhp, 420Nm/500Nm ஆகிய அளவிலான ஆற்றலையும் கொண்டுள்ளது. அதிக டார்க் கொண்டிருக்கும் இந்த மாடலில் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 4x4 ஸ்டாண்டார்ட் வடிவம் கொண்டு இந்த மாடல், ஆஃப் ரோட் வாகனமாகக் கருதப்படுகிறது. மேலும் இதில் இரண்டு விதமான ட்ரைவ் மோட் வழங்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் ஹிலக்ஸ் வாகனம் முழுமையாக அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட வாகனமாக இருப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. வெளிப்புறத்தில் எல்.இ.டி ரக ஹெட் லேம்ப்கள், 18 இன்ச் அல்லாய் சக்கரங்கள் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஹெட் லேம்ப்கள் DRL என்றழைக்கப்படும் பகல் நேரத்திலும் எரியும் தன்மை கொண்டவை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் 8 இன்ச் அளவிலான Smart Playcast Touchscreen Audio பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் உள்ள சீட்கள் லெதரில் தயாரிக்கப்பட்டுள்ளன. டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலைப் போல இந்த மாடலிலும் விலையுயர்ந்த ரகத்திலான சிறப்பம்சங்களான dual zone climate control, cruise control, Eight-way Powered Front Seat, பின்பக்கத்தில் சென்சார்களுடனான கேமரா, வெளிப்புறக் கண்ணாடியில் எலக்ட்ரானிக் அம்சம் முதலானவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களாக ஹிலக்ஸ் மாடலில் 7 ஏர் பேக்ஸ், ABS with EBD, Vehicle Stability Control, Traction Control, Hill Assist & Downhill Assist Electronic Controls, Trailer Sway Control, automatic limited slip differential முதலானவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் புதிய கார் பாதுகாப்பு சோதனைத் திட்டத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் 5 ஸ்டார் க்ராஷ் சேஃப்டி ரேட்டிங் பெற்றுள்ளது.
Emotional Red, White Pearl, Silver Metallic, Super White, Grey Metallic ஆகிய ஐந்து வண்ணங்களில் டொயோட்டா ஹிலக்ஸ் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் டொயோட்டா ஹிலக்ஸ் மாடலில் tent with canopy, tailgate assist, wireless charging, tonneau cover முதலான சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.