Turbocharged petrol engine cars: மிடில் கிளாஸ் டார்கெட்!! இந்தியாவில் விற்கப்படும் டாப் 5 டர்போசார்ஜ் பெட்ரோல் கார்கள் எவை.?
இந்தியாவில் மிடில் கிளாஸ் குடும்பங்களைக் குறிவைத்து வெளியிடப்பட்டுள்ள டாப் 5 டர்போசார்ஜ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம்..
சில ஆண்டுகளுக்கு முன்பு, டர்போசார்ஜ் பெட்ரோல் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட கார்கள் பெரிதும் வெளியிடப்படாத நிலையில், தற்போதைய பி.எஸ் 4 ரக எஞ்சின்களுக்கான விதிமுறைகளால் இந்தியாவில் கார் உற்பத்தியாளர்கள் சிறியளவிலான டர்போ பெட்ரோல் எஞ்சின்களை தங்கள் மாடல்களில் பொருத்தி வெளியிட்டு வருகின்றனர்.
டர்போசார்ஜ் எஞ்சின் பொருத்தப்படுவது கார் மாடலை எரிபொருள் குறைவாக செலவிடச் செய்வதோடு, அதனை இயக்குவதை மேலும் இலகுவாக்குகிறது. இந்தியாவில் மிடில் கிளாஸ் குடும்பங்களைக் குறிவைத்து வெளியிடப்பட்டுள்ள டாப் 5 டர்போசார்ஜ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம்..
டாடா நெக்ஸான் - 7.39 லட்சம் ரூபாய்
1.2 லிட்டர் 3 சிலிண்டர் பொருத்தப்பட்ட டர்போசார்ஜ் பெட்ரோல் 120 PS ஆற்றலையும், 170 Nm டார்க் வசதியும் கொண்டது. இந்தியாவில் தற்போது மிகக் குறைந்த விலையிலான டர்போசார்ஜ் பெட்ரோல் எஞ்சின் கார் மாடலாக டாடா நெக்ஸான் வெளியாகியுள்ளது. 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பொருத்தப்பட்ட டர்போசார்ஜ் பெட்ரோல் 110 PS ஆற்றலையும், 260 Nm டார்க் வசதியும் கொண்ட மற்றொரு மாடலும் டாடா நெக்ஸான் மாடல்களுள் ஒன்று.
இதில் எலக்ட்ரிக் சன்ரூஃப், கற்றோட்ட வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள், 16 இன்ச் அல்லாய் வீல்ஸ், IRVM, ஏர் ப்யூரிஃபையர், க்ரூஸ் க்ண்ட்ரோல், 7 இன்ச் அளவிலான டச்ஸ்க்ரீன், ஏப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ, 8 ஸ்பீக்கர் சிஸ்டம், கார் டெக் முதலான பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
ரெனால்ட் கைகர் - 7.64 லட்சம் ரூபாய்
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள குறைந்த விலையிலான SUV மாடல் கார்களுள் ஒன்றாக ரெனால்ட் கைகர் கருதப்படுகிறது. இந்த சீரிஸில் இரண்டு எஞ்சின் மாடல்கள் வெளியாகியுள்ளன. 1 லிட்டர் 3 சிலிண்டர் பொருத்தப்பட்ட டர்போசார்ஜ் பெட்ரோல் 72 PS ஆற்றலையும், 96 Nm டார்க் வசதியும் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலும், 1 லிட்டர் 3 சிலிண்டர் பொருத்தப்பட்ட டர்போசார்ஜ் பெட்ரோல் 100 PS ஆற்றலையும், 160 Nm டார்க் வசதியும் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலும் இதில் இடம்பெற்றுள்ளன.
நிஸ்ஸான் மேக்நைட் - 7.67 லட்சம் ரூபாய்
நிஸ்ஸான் மேக்நைட் மாடலும், ரெனால்ட் கைகர் மாடலைப் போலவே 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் கொண்ட மாடலையும், 1 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் எஞ்சினைக் கொண்ட மாடலையும் வெளியிட்டுள்ளது. 100 PS ஆற்றலையும், 160 Nm டார்க் வசதி கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக இது உருவாகப்பட்டுள்ளது. இந்த மாடலில் LED ஹெட்லாம்ப்கள், 8 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ட்ச் ஸ்க்ரீன், குரல் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம், 360 டிகிரி பார்வையிடும் கேமரா முதலான சிறப்பம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
வோக்ஸ்வேகன் போலோ - 7.8 லட்சம் ரூபாய்
இந்தியாவில் வெளியாகியுள்ள ஹேட்ச்பேக் மாடல்களின் சிறந்தவற்றுள் ஒன்றாகக் கருதப்படுவது வோக்ஸ்வேகன் போலோ. இதன் ட்ரைவிங் டைனாமிக்ஸ் சிறந்ததாகக் கருதப்படுவதோடு, இதன் ஆற்றல்மிக்க எஞ்சின் மாடல் இதன் ஆயுளை அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளது. பிஎஸ் 6 ரக மாடல்களில் போலா சீரிஸில் 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் கொண்ட மாடலையும், 1 லிட்டர் 3 சிலிண்டர் பொருத்தப்பட்ட டர்போசார்ஜ் பெட்ரோல் 110 PS ஆற்றலையும், 175 Nm டார்க் வசதியும் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலையும் வெளியிட்டுள்ளது வோக்ஸ்வேகன்.
ஹுண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் - 7.89 லட்சம் ரூபாய்
1 லிட்டர் 3 சிலிண்டர் பொருத்தப்பட்ட டர்போசார்ஜ் பெட்ரோல் 100 PS ஆற்றலையும், 172 Nm டார்க் வசதியும் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலைக் கொண்டிருக்கும் ஹுண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் கார் தற்போது விற்பனை செய்யப்படும் இத்தகைய மாடல்களுள் அதிக வேகம் கொண்ட மாடலாக இது இடம்பெற்றுள்ளது. 10 நொடிகளுக்குள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மாடல் இது.