Tata Curvv: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா டாடா கர்வ்..! ஆகஸ்ட் 7ம் தேதி மின்சார எடிஷனுடன் அறிமுகம்?
Tata Curvv: டாடா நிறுவனத்தின் கர்வ் கார் மாடல், ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Tata Curvv: டாடா நிறுவனத்தின் கர்வ் கார் மாடலின், மின்சார எடிஷனும் அதே நாளில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
டாடா கர்வ் அறிமுகம் எப்போது?
டாடா நிறுவனம் தனது கர்வ் மாடல் காரை, வரும் ஆகஸ்ட் 7ம் தேதியன்று இந்தியாவில் காட்சிப்படுத்த உள்ளது. அந்த நிகழ்ச்சியின் போது கர்வ்வின் டீசல் மற்றும் மின்சார எடிஷன்களுக்கான விலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்வ் அதன் டீசல் வடிவில் உற்பத்திக்கு தயாரான அவதாரத்தில், பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது EV எடிஷனும் வெளியிடப்பட உள்ளது.
இன்ஜின் ஆப்ஷன்கள் என்ன?
ICE மற்றும் EV பதிப்பு இரண்டும் ஒன்றாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. ICE எடிஷன் 1.5லிட்டர் டீசல் எஞ்சினுடன் டீசல் மட்டுமே கிடைக்கும். 1.2லி டர்போ பெட்ரோல் கொண்ட பெட்ரோல் எடிஷன் பின்னர் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. EV எடிஷன் டீசலுடன் ஒரே நாளில் சந்தைபப்டுத்தப்படும். இது Nexon EV ஐ விட பெரிய பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் Acti.ev கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது தட்டையான தளத்துடன் இது ஒரு ஃப்ரங்க் போன்ற அம்சங்களைப் பெறும்.
கர்வ் வடிவமைப்பு விவரங்கள்:
4308mm நீளம் கொண்ட Curvv நீளத்தின் அடிப்படையில் நெக்ஸானை விட உயரமாகவும், ஹாரியரை விட சற்று குறைவாகவும் இருக்கும். இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள முதல் சிறிய எஸ்யூவி கூபே இதுவாகும். பூட் ஸ்பேஸ் 422 லிட்டராக இருக்கும். அம்சங்கள் பட்டியலில் EVக்கான பெரிய தொடுதிரை, EV& ICE பதிப்பு இரண்டிலும் பகிரப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றோட்டமான இருக்கைகள், பவர்ட் டிரைவர் இருக்கை, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS போன்ற அம்சங்களையும் எதிர்பார்க்கலாம். ஸ்டேண்டர்ட் ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், பல்வேறு கூடுதல் அம்சங்களும் வாகனத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸானைப் போலவே ICE எடிஷனிலும் Curvv EV ஸ்டைலிங் மாற்றங்களைப் பெறும். Curvv நெக்ஸான் விலையை விட அதிகமாக இருக்கும். ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் பலவற்றிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பயனாளர்களை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.