(Source: ECI/ABP News/ABP Majha)
TVS Apache RTR 160 Race Edition: வந்தது டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 ரேஸ் எடிஷன் - அம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
TVS Apache RTR 160 Race Edition: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், டிவிஎஸ் நிறுவனத்தின் அபாச்சி ஆர்டிஆர் 160 ரேஸ் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
TVS Apache RTR 160 Race Edition: டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய அபாச்சி ஆர்டிஆர் 160 ரேஸ் எடிஷன் மோட்டார்சைக்கிள், ஸ்போர்ட்டி லுக்கை கொண்டுள்ளது.
டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 ரேஸ் எடிஷன்:
TVS Motor நிறுவனமானது அபாச்சி ஆர்டிஆர் 160 இன் ரேஸ் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்போர்ட்டி பைக்காக இருந்த இந்த பைக்கை ஸ்போர்ட்டி லுக் பதிப்பாக மாற்றி அமைத்துள்ளது. அபாச்சியின் இந்தப் புதிய பதிப்பைப் பற்றிய வடிவமைப்பு மற்றும் செயல்திறன் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
TVS அபாச்சி RTR 160 ரேஸ் எடிஷன்:
அபாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் அபாச்சி ஆர்டிஆர் 160 4V பைக்குகளின் பிளாக் எடிஷனை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, நிறுவனம் தற்போது அபாச்சி RTR 160 இன் ரேஸ் எடிஷனை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. பைக்கை இன்னும் ரேஸியாக மாற்ற ரேஸ் எடிசனுடன் ஸ்டைலிங்கைத் திருத்தியுள்ளது. இந்த எடிஷனின் சிறப்பு என்னவென்றால், அதன் மேட் பிளாக் கலர் ஸ்கீம், ரேஸ் எடிஷன் லோகோ, கார்பன் ஃபைபர் ரேஸ் கிராபிக்ஸ் மற்றும் சிவப்பு அலாய் வீல்கள் ஆகியவையாகும். இதன் காரணமாக, இந்த பைக் அதிக ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கிறது.
அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
புதிய அபாச்சி எடிஷன் பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி பேசுகையில், இது ஃப்யூவல் இன்ஜெக்ஷன், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், ஸ்மார்ட்எக்ஸ் கனெக்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய புளூடூத் இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகிய அம்சங்களை பெற்றுள்ளது. எல்இடி ஹெட் மற்றும் டெயில் லேம்ப்கள், புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் டிவிஎஸ் கனெக்ட் செயலி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதில் ரெயின், அர்பன் மற்றும் ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. இதனுடன், ரேஸ் டெலிமெட்ரி, கால் மற்றும் எஸ்எம்எஸ் நோட்டிபிகேஷன்கள், கியர் பொசிஷன் மற்றும் கியர் ஷிப்ட் இண்டிகேட்டர் மற்றும் லேப் டைமர், அனுசரிப்பு பிரைட்னஸ், க்ராஷ் அலர்ட் சிஸ்டம் மற்றும் ஜிடிடி (கிளைடு த்ரூ டெக்) போன்ற மேம்பட்ட அம்சங்களும் அபாச்சி ஆர்டிஆர் 160 இன் ரேஸ் எடிஷனில் வழங்கப்பட்டுள்ளன.
TVS Apache RTR 160 ரேஸ் எடிஷனின் இன்ஜின் செயல்திறன் என்ன?
அபாச்சி ரேஸ் எடிஷனின் இன்ஜின் பற்றி பேசுகையில், இதில் 159.7சிசி ஏர் கூல்டு இன்ஜின் உள்ளது. இது 6.04 பிஎச்பி பீக் பவர் மற்றும் 13.85 என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 720 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.