புத்தாண்டை Skoda Slavia கார் வாங்கி கொண்டாடலமா? மைலேஜ், விலை என்ன?
ஸ்கோடா நிறுவனத்தின் Skoda Slavia காரின் விலை, மைலேஜ், தரம் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று ஸ்கோடா. ஸ்கோடா நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. இந்திய சந்தையைப் பொறுத்தமட்டில் ஸ்கோடாவின் கார்கள் தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் நிறைந்ததாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் கருதப்படுகிறது.
Skoda Slavia:
ஸ்கோடா நிறுவனத்தின் Slavia காரின் தரம்,விலை, மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
செடான் ரக கார்களிலே மிகவும் சிறப்பான காராக இந்த Slavia கார் உள்ளது. இதன் வசீகரமான தோற்றமும், உட்கட்டமைப்பும் இதற்கு மிகப்பெரிய பக்கபலமாகும். ஸ்டைலிஷ் பிரிமியமான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.75 லட்சம் ( ஆன் ரோட் விலை) ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 21.80 லட்சம் ஆகும்.
இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 114 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. மொத்தம் 12 வேரியண்ட் கொண்ட இந்த Slavia காரில் 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் மட்டுமின்றி 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட காரும் உள்ளது. 1498 சிசி பொருத்தப்பட்ட கார்கள் 3 வேரியண்ட் உள்ளது.
வேரியண்ட்களும், விலைகளும்:
Slavia Classic 1.0L TSI MT - ரூ.11.75 லட்சம்
Slavia Signature 1.0L TSI MT - ரூ.16.15 லட்சம்
Slavia Sportline 1.0L TSI MT - ரூ.16.40 லட்சம்
Slavia Signature 1.0L TSI AT - ரூ.17.44 லட்சம்
Slavia Sportline 1.0L TSI AT - ரூ.17.69 லட்சம்
Slavia Prestige 1.0L TSI MT - ரூ.18.44 லட்சம்
Slavia Monte Carlo 1.0L TSI MT - ரூ.18.44 லட்சம்
Slavia Sportline 1.5L TSI DSG - ரூ.19.64 லட்சம்
Slavia Prestige 1.0L TSI AT - ரூ.19.84 லட்சம்
Slavia Monte Carlo 1.0L TSI AT - ரூ.19.84 லட்சம்
Slavia Prestige 1.5L TSI DSG - ரூ.21.80 லட்சம்
Slavia Monte Carlo 1.5L TSI DSG - ரூ.21.80 லட்சம்
மைலேஜ்:
இந்த கார் மிகவும் பாதுகாப்பான காராக கருதப்படுகிறது. GNCAP இந்த காருக்கு 5 ஸ்டார் பாதுகாப்பு தரக்குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்த காரின் விலை ரூபாய் 63 ஆயிரத்து 207 வரை குறைந்துள்ளது. 178 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
மேனுவல் காரில் 6 கியர்களை கொண்டது. நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு மிகவும் ஏதுவானதாக இருக்கிறது. இந்த Skoda Slavia காரில் 20.32 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இந்த காரில் மிகவும் வேகமாக செல்லும்போது எஞ்ஜின் சத்தம் அதிகளவு இருப்பது ஓட்டுனர்களுக்கு சற்று அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த காரில் எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது. இது கேபினுக்கு மேலும் வெளிச்சத்தை தருருகிறது. 10 இன்ச் டச் டிஸ்ப்ளே இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வசதி உள்ளது. 521 லிட்டர் டிக்கி வசதி கொண்டது.
இந்த காரில் 6 ஏர்பேககுகள் வசதி கொண்டது. எலக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ், மல்டி காலிசன் ப்ரேக்கிங் வசதி உள்ளது. அடாஸ் வசதி இதில் இல்லாதது பின்னடைவாக உள்ளது. வோக்ஸ்வேகனின் விர்டஸ், ஹுண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.





















