Royal Enfield Super Meteor 650 Cruiser: ராயல் என்ஃபீல்டின் ராஜா.. என்ஃபீல்டு சூப்பர் Meteor 650 CC க்ரூஸர் சிறப்பம்சங்கள்.. எப்ப வருது தெரியுமா?
Super Meteor 650 என்ற பெயரில் அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப்பைக்குகள் நடப்பில் உள்ள, ராயல் என்ஃபீல்டு 350 CC பைக்கை விட, அதிக வசதிகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டார் சந்தையில், தினம் தினம் புதுமாடல் பைக்குகள் களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரபல ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியார் 650 CC க்ரூஸர் பைக்குகளை களமிறக்க உள்ளது. இந்த பைக்குகள் ராயல் என்ஃபீல்டு மீட்டியார் பெயரில் வெளியாக இருக்கிறதாம்.
Super Meteor 650 என்ற பெயரில் அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பைக்குகள் நடப்பில் உள்ள, ராயல் என்ஃபீல்டு 350 CC பைக்கை விட, அதிக வசதிகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரூஸர் ரக மாடலை போன்ற ஸ்டைலில் வரவிருக்கும் இந்த பைக்குகள் தயாரிப்புக்கு நெருங்கி விட்டது.
View this post on Instagram
இந்த பைக்கில், Swept back bars மற்றும் Mid Mounted Foot Pegs இருக்கிறது. ஸ்போர்ட் பைக்குக்கான அம்சங்களுடன் வரவிருக்கும் இந்த 650 CC பைக்கில் LED லைட், பெரிய இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், Enfield Tripper navigation ஆகியவை அடங்கியிருக்கிறது. இந்த வகை க்ரூஸர் பைக்கில் அதிக தூர பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் பெரிய Windshield மற்றும் பின்சக்கரத்தில் பெரிய டயர் உள்ளிட்டவை இருக்கிறது.
View this post on Instagram
ராயல் என்ஃபீல்டின் Continental GT, Interceptor ரகபைக்குகளை போன்றே 47.6PS பவரையும் 52Nm டார்க்கை உள்ளடக்கிய இந்த பைக், தொலைதூரபயணத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது.
இதுமட்டுமன்றி, இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டத்தை கொண்டுள்ள இந்த பைக்கில் USD forks வும் இடம்பெற்றிருக்கிறது. இந்த வருடத்தின் இறுதியில், இந்த பைக் சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Kawasaki Vulcan S பைக்கிற்கு போட்டியாக பார்க்கப்படும் இந்த பைக், நிறுவனம் வெளியிடும் விலைக்கு தகுந்த பைக்காக இருக்கும்.