Renault Triber New Lift: நம்ம குடும்பத்துக்கு ஏத்த 7 சீட்டர் கார்.. புதிய லோகுவுடன் வரும் டிரைபர்.. பட்ஜெட் கம்மி தான்! முழு விவரம்
ரெனால்ட் நிறுவனத்தின் பிரபலமான 7 சீட்டர் MPV மாடலான ட்ரைபர், 2025 ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய லோகோவுடன் இன்று (ஜூலை 23) இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.

ரெனால்ட் நிறுவனத்தின் பிரபலமான 7 சீட்டர் MPV மாடலான ட்ரைபர், 2025 ஃபேஸ்லிஃப்ட் வடிவில் இன்று (ஜூலை 23) இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. கடந்த சில வாரங்களாக சோதனை ஓட்டங்களில் பங்கேற்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் டீஸர் வீடியோக்கள் வெளியான நிலையில் அதன் முக்கிய அம்சங்கள் வெளிவந்துள்ளன்ம்
புதிய டிசைன் ஹைலைட்ஸ்
முன்புறம் முழுவதும் மாற்றம் – புதிய லோகோ, LED லைட்கள்
ரெனால்ட் நிறுவனம் வெளியிட்ட டீஸர் வீடியோவிலேயே இந்த புதிய ட்ரைபரின் முக்கிய மாற்றங்கள் தெரிய வந்துள்ளன. முழுவதும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட கிரில், புதிய ரெனால்ட் லோகோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பின்புறம் மாற்றப்பட்ட பம்பர், புதிய LED டெயில்லேம்ப்கள், ஒருங்கிணைந்த பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டெயில்லேம்ப்களுக்கு இடையே நீளமான கருப்பு நிற அப்ளிக் பேனல் போன்றவை கூடுதல் ஸ்டைலிஷ் தோற்றத்தை அளிக்கின்றன.
Think you know space? Rethink it
— Renault India (@RenaultIndia) July 21, 2025
new #Renault #Triber #comingsoon pic.twitter.com/tgYYH8QX1G
மேலும், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டிரியரில் மாற்றம்:
புதிய ட்ரைபரின் கேபின் வடிவமைப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ படங்கள் எதுபிம்வெளியாகவில்லை. இருப்பினும், இந்த 7 இருக்கைகள் கொண்ட ஃபெமிலி MPV-யில், தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் பெரிய டச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மேம்பட்ட கேபின் தீம் போன்றவை இணைக்கப்படும் என நிபுணர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். மேலும், 360 டிகிரி கேமரா வசதி சேர்க்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எஞ்சினில் மாற்றம் இருக்கா?
பவர் ட்ரெயின் விஷயத்தில், புதிய ட்ரைபர் காரில் மாற்றம் இல்லாமல் தொடரும் என்று கூறப்படுகிறது. அதாவது, தற்போது உள்ள போலவே 1.0 லிட்டர், 3 சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் தொடரும். இது அதிகபட்சமாக 72bhp பவரும், 96Nm டார்க்கும் வழங்கும்.
டிரான்ஸ்மிஷனிலும் எந்த மாற்றமும் இல்லை – 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT என இரு விருப்பங்களும் தொடரும்.

என்ன விலைக்கு வருகிறது?
புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ.6.15 லட்சம் முதல் ரூ.8.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. வெறும் சிறிய அளவிலான விலை உயர்வே ஏற்பட்டாலும், ட்ரைபர் இன்னும் நாட்டின் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் 7-இருக்கைகள் கொண்ட ஃபெமில் MPV கார் என்னும் அடையாளத்தை தொடர்கிறது.























