(Source: ECI/ABP News/ABP Majha)
Porsche Macan EV: போர்ஷேவின் மேகன் மின்சார கார் இந்தியாவில் அறிமுகம் - ரூ.1.5 கோடிக்கு வொர்த்தா?
Porsche Macan EV: போர்ஷே நிறுவனத்தின் மேகன் மின்சார கார் மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Porsche Macan EV: போர்ஷே நிறுவனத்தின் மேகன் மின்சார கார் மாடலின் விலை, இந்திய சந்தையில் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
போர்ஷே மின்சார கார் மேகன்:
போர்ஷே தனது இரண்டாவது மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் இரண்டு ஃபோர் வீல் வேரியண்ட்களில் இந்த வாகனம் விற்பனைக்கு வர உள்ளது. அதன்படி, 408hp Macan 4 மற்றும் 639hp Macan Turbo வேரியண்ட்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். போர்ஷே இந்தியா நிறுவனம் Macan Turbo க்கான முன்பதிவுகளைத் திறந்துள்ளது. இதன் விலை ரூ. 1.65 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் வாகனம் டெலிவரி செய்யப்பட உள்ளது. அதேநேரம், 2025 ஆம் ஆண்டின் இறுதி வரை மின்சார Macan பெட்ரோல் எடிஷனுடன் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Porsche Macan EV: platform:
புதிய எலெக்ட்ரிக் மேகன் 103மிமீ நீளம், 15மிமீ அகலம் கொண்டிருக்க, தற்போதுள்ள பெட்ரோல் மாடலை விட உயரத்தில் 2மிமீ குறைவாக உள்ளது. இது Audi Q6 E-tron உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இது அதன் பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலக்ட்ரிக் (PPE) கட்டமைப்பில் சேஸ், பேட்டரிகள் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் முக்கிய பகுதிகளை புதிய போர்ஷுடன் பகிர்ந்து கொள்கிறது. மின்சார கெய்ன்னே (Cayenne) PPE இயங்குதளத்தையும் பயன்படுத்தும்.
Macan EV: exterior design:
வெளிப்புற ஸ்டைலிங் அசல் மேகனில் நிறுவப்பட்ட வழக்கமான தோற்றத்திலிருந்து மாறுபட்டுள்ளது. டெய்கானின் வடிவமைப்பு குறிப்புகளை சார்ந்துள்ளது. குறிப்பாக அதன் தனித்துவமான செவ்வக முகப்பு விளக்குகள் மற்றும் ரேப்பரவுண்ட் எல்இடி லைட் பார் ஆகியவை கவனம் ஈர்க்கின்றன. முதல் தலைமுறை Macan ஐ விட கூரை மற்றும் ஒட்டுமொத்த silhouette குறிப்பிடத்தக்க வகையில் நேர்த்தியாக உள்ளது.
interior and features:
புதிய மேகன் இன்டீரியர் ஸ்டைல் மற்றும் லேஅவுட் அடிப்படையில் தற்போதைய கயென்னுடன் (Cayenne) பொருந்துகிறது. நிலையான 12.6-இன்ச் வளைந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 10.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் உள்ளது. மூன்றாவதாக உள்ள பயணிகளுக்கு விருப்பமான தனி 10.9-இன்ச் டச்ஸ்கிரீன் ஆனது வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகளை சரிசெய்யவும் பயன்படுகிறது. கியர் செலக்டர் சென்டர் கன்சோலில் இருந்து டாஷ்போர்டில் உயர் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இது இரண்டு கப் ஹோல்டர்களுக்கு கூடுதல் இடத்தையும், சென்டர் கன்சோலில் ஸ்மார்ட்போன் சார்ஜிங் பேடையும் வழங்குகிறது. நீண்ட வீல்பேஸ் இரண்டு வரிசைகளிலும் அதிக கால்வைப்பதற்கு அதிக வசதியை வழங்குகிறது.
பேட்டரி விவரங்கள்:
Macan இன் 95kWh பேட்டரியை 800V DC சிஸ்டத்தில் 270kW வரை சார்ஜ் செய்ய முடியும். இது 21 நிமிடங்களுக்குள் 10-80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆவதாக போர்ஷே தெரிவித்துள்ளது. 240kW வரை மின்சார ஆற்றலை பிரேக்கிங் மற்றும் வேகத்தை குறைப்பதன் மூலம் மீட்டெடுக்க முடியும். Macan Turbo எடிஷனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 591 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.