New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் இரண்டாவது தலைமுறை செல்டோஸ் கார் மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

New Kia Seltos 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் இரண்டாவது தலைமுறை செல்டோஸ் கார் மாடலின் விலை ஜனவரி 2ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
புதிய தலைமுறை கியா செல்டோஸ்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி ஆன செல்டோஸ் கார் மாடலானது 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.உள்நாட்டில் இந்த கொரியா ப்ராண்ட் சென்றடைய எஸ்யுவி ஆன முக்கிய பங்கு வகித்தது. தற்போது இந்தியாவில் 5.8 லட்சத்திற்கும் அதிகமான செல்டோஸ் மாடலின் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது தலைமுறை செல்டோஸ் மாடலை கியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் உயர்தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட இந்த காரானது, தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் மிக முக்கிய கார் மாடலாக இது திகழ்கிறது.
புதிய தலைமுறை செல்டோஸின் விலை:
புதிய தலைமுறை செல்டோஸ் காருக்கான முன்பதிவானது இன்று நள்ளிரவு முதல் தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கியா நிறுவனத்தின் ஷோருமிற்கு நேரடியாக சென்றும் அல்லது ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். அதற்கு 25 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும். தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காருக்கான விலையானது ஜனவரி 2ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
புதிய செல்டோஸின் வேரியண்ட்கள், வண்ணங்கள்:
2026 செல்டோஸ் HTE, HTK, HTX மற்றும் GTX டிரிம் நிலைகளில் வழங்கப்படும் என்பதை கியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையான வேரியண்ட்களுடன் பிராண்ட் விருப்பத்தேர்வு கூடுதல் தொகுப்புகளையும் அறிமுகப்படுதியுள்ளது. அதன்படி விருப்பத்தின் அடிப்படையில் அம்சங்களை கஸ்டமைஸ்ட் செய்து ப்ரீமியம், ADAS மற்றும் X-லைன் டிசைன் ஆகிய வேரியண்ட்களையும் பயனர்கள் பெறலாம். புதியதாக சேர்க்கப்பட்ட மார்னிங் ஹேஸ் மற்றும் மாக்மா ரெட் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக, 10 ஒற்றை வண்ண விருப்பங்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.
புதிய செல்டோஸின் வெளிப்புற டிசைன்:
புதிய செல்டோஸ் ஆனது கியாவின் புதிய K3 ப்ளாட்ஃபார்மை பயன்படுத்துகிறது. இது அதிக வலிமை கொண்ட எஃகு பயன்பாடு ஆகியவற்றை உறுதி செய்கிறது. புதிய தலைமுறை செல்டோஸின் வெளிப்புற பரிமாணங்களானது முற்றிலுமாக திருத்தப்பட்டுள்ளதாக கியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த எஸ்யூவி இப்போது 4,460 மிமீ நீளமும் 1,830 மிமீ அகலமும் கொண்டு, முந்தைய மாடலை விட 95 மிமீ நீளமாகவும், 30 மிமீ அகலமாகவும் உள்ளது. மேலும், வீல்பேஸ் 80 மிமீ நீட்டிக்கப்பட்டுள்ளது, இப்போது 2,690 மிமீ அளவிடப்படுகிறது, இது கேபின் இடத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 18 இன்ச் அலாய் வீல்கள், உடலுடன் பொருந்தக்கூடிய கதவு கைப்பிடிகள் இருக்கும். கூடுதல் அப்க்ரேட்களில் பின்புற வைப்பர், ஒரு ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் முன் மற்றும் பின்புறம் அமைந்துள்ள அலங்கார ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவை அடங்கும்.
புதிய செல்டோஸின் உட்புற டிசைன், அம்சங்கள்:
வெளிப்புறத்தை போன்றே உட்புறத்திலும் செல்டோஸ் முற்றிலுமாக திருத்தப்பட்டுள்ளது. அதேநேரம், தற்போதுள்ள மாடலின் சில தாக்கமும் தொடர்கிறது. உதாரணமாக12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன், 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 5.0-இன்ச் HVAC டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்ட பனோரமிக் டிஸ்ப்ளே, சைரோஸுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது . சென்டர் கன்சோலில் உள்ள பிஸிகல் சுவிட்ச் கியரின் அமைப்பும் சிரோஸைப் போன்றது. இருப்பினும், இது புதிய ட்ரைவ் மற்றும் ட்ராக்ஷன் மோட் பட்டன்களுடன் முற்றிலும் புதிய, மூன்று-ஸ்போக் ஸ்டீயரிங் வீலைப் பெறுகிறது
உபகரணங்களைப் பொறுத்தவரை, டாப்-ஸ்பெக் கியா செல்டோஸ் வெண்டிலேடட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, மெமரி செயல்பாடு கொண்ட பவர்ட் ஓட்டுனர் இருக்கை, பின்புற சன்-ஷேடுகள், டூயல்-டோன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, 360-டிகிரி கேமரா, 64-வண்ண ஆம்பியண்ட் லைட்ஸ், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், OTA அப்டேட்கள், கனெக்டட் தொழில்நுட்பம், லெவல் 2 ADAS சூட் ஆகியவற்றைப் கொண்டுள்ளது. நிலையான பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ESC, ஆல்-வீல் டிஸ்க் ப்ரேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், TPMS, ISOFIX ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற கேமரா ஆகியவை அடங்கும்.
புதிய செல்டோஸின் பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள்
புதிய தலைமுறை செல்டோஸில் தற்போதைய சூழலில் ஹைப்ரிட் மற்றும் மின்சார எடிஷன்கள் கிடையாது என்பதை கியா உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், இரண்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் என மூன்று இயந்திர ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- 1.5 லிட்டர் இயற்கையாகவே உறிஞ்சப்பட்ட பெட்ரோல்: 115 PS மற்றும் 144 Nm
- 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்: 160 PS மற்றும் 253 Nm
- 1.5 லிட்டர் டர்போ-டீசல்: 116 PS மற்றும் 250 Nm
ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் மேனுவல் கியர்பாக்ஸ், ஐஎம்டி (கிளட்ச்லெஸ் மேனுவல்), சிவிடி ஆட்டோமேட்டிக் மற்றும் டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.





















