Fuel Efficient Diesel Compact SUV: கம்மி விலை, அதிக மைலேஜ் - சந்தையில் அசத்தும் டீசல் காம்பாக்ட் எஸ்யுவிக்கள்
Fuel Efficient Diesel Compact SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அசத்தும் டீசல் காம்பாக்ட் எஸ்யுவிக்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Fuel Efficient Diesel Compact SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அசத்தும் டீசல் காம்பாக்ட் எஸ்யுவிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டீசல் காம்பாக்ட் எஸ்யுவி கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது டீசல் இன்ஜினுடன் ஆறு காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பிரிவில் பெட்ரோல் கார் மாடல்களுக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், மிகவும் கணிசமான டீசல் கார்களே உள்ளன. எஸ்யூவிகளில் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யு மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, தார் ஆர்டபிள்யூடி மற்றும் பொலேரோ நியோ ஆகியவை உள்ளன. ஏற்கனவே சோனெட்டைக் கொண்டுள்ள கியா, அதன் இரண்டாவது சிறிய எஸ்யூவியான சிரோஸின் விலையை பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இந்நிலையில், இந்திய சந்தையில் மைலேஜ் அடிப்படையில் சிறந்த டீசல் காம்பாக்ட் எஸ்யுவிக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சிறந்த டீசல் காம்பாக்ட் எஸ்யுவி:
7. மஹிந்திரா தார் RWD - 15.2kpl
மஹிந்திரா தார் 3 டோர் சிறிய 1.5-லிட்டர் டீசல் இன்ஜினை கொண்டு 119hp மற்றும் 300Nm - காம்பாக்ட் எஸ்யுவி பிரிவிற்கு தகுதி பெறுகிறது. தார் RWD லிட்டருக்கு 15.2 கிமீ மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக உள்ளது. மஹிந்திரா தார் RWD விலை ரூ.11.49 லட்சம் முதல் ரூ.12.99 லட்சம் வரை.
6. மஹிந்திரா பொலேரோ நியோ - 18.04kpl
மஹிந்திராவின் TUV300 இன் பெரிதும் மேம்படுத்தப்பட்ட எடிஷனான, பொலிரோ நியோ 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் விற்பனையில் உள்ள மற்ற ஒரே லேடர்-ஃபிரேம் மற்றும் ரியர்-வீல் டிரைவ் காம்பாக்ட் SUV மஹிந்திரா பொலிரோ நியோ ஆகும். இது 100hp, 1.5-லிட்டர் இன்ஜினுடன் 5- ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸை கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 18.04 கிமீ மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இதன் விலை ரூ.9.95 லட்சம் முதல் ரூ.12.15 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. கியா சிரோஸ் - 20.75kpl
சிரோஸின் விலையை கியா இன்னும் வெளியிடவில்லை என்றாலும் , தீவிரமான தோற்றமுடைய டால் பாய் பற்றிய மற்ற எல்லா தகவல்களும் கசிந்துள்ளன. இது 116hp, 1.5 லிட்டர் இன்ஜினுடன் வருகிறது. மேனுவல் எடிஷனில் லிட்டருக்கு 20.75 கிமீ, ஆட்டோமேடிக் எடிஷன் லிட்டருக்கு 17.65கிமீ மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.
4. மஹிந்திரா XUV 3XO - 21.2kpl
மஹிந்திராவின் மற்றொரு காம்பாக்ட் SUV ஆன XUV 3XO, ஐந்து இருக்கைகள், அதிக பிரீமியம் மற்றும் அதிக சக்திவாய்ந்த 117hp, 1.5-லிட்டர் இன்ஜினுடன் வருகிறது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. அவை முறையே லிட்டருக்கு 20.6 கிமீ மற்றும் 21.2 கிமீ மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. மஹிந்திரா XUV 3XO டீசல் வரம்பின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.14.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. கியா சோனெட் - 22.3kpl
கியா சோனெட் அதன் 116hp டீசல் இன்ஜினை சிரோஸ் உடன் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸில் முறையே, லிட்டருக்கு 22.3 கிமீ மற்றும் 18.6 கிமீ மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இதன் விலை வரம்பு ரூ. 10 லட்சம்-13.34 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. ஹூண்டாய் வென்யு - 23.7kpl
ஹூண்டாய் வென்யு மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு கியா கார்களில் உள்ள, அதே 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜினைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. வென்யு கார் மாடல் லிட்டருக்கு 23.7கிமீ மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. வென்யு டீசல் விலை தற்போது ரூ.10.80 லட்சம் முதல் 13.53 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1. டாடா நெக்ஸான் - 24.08kpl
டாடா நெக்ஸான் 2025 ஆம் ஆண்டிற்கான அப்டேட்டுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் டீசல் எடிஷன் விலை தற்போது ரூ.11.30 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 115hp, 1.5-லிட்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் எடிஷன்கள் முறையே, லிட்டருக்கு 24.08 கிமீ மற்றும் 23.23 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

