MG Windsor Vs BYD Atto 3 Vs Nexon EV: ஒண்டிக்கு ஒண்டி - எம்ஜி வின்ட்சர் Vs பிஒய்டி ஆட்டோ 3 Vs நெக்ஸான் - எந்த மின்சார கார் பெஸ்ட்?
MG Windsor Vs BYD Atto 3 Vs Nexon EV: எம்ஜி வின்ட்சர், பிஒய்டி ஆட்டோ 3 மற்றும் நெக்ஸான் ஆகிய 3 மின்சார கார்களின் ஒப்பீட்டை இந்த தொகுப்பில் அறியலாம்.
MG Windsor Vs BYD Atto 3 Vs Nexon EV: எம்ஜி வின்ட்சர், பிஒய்டி ஆட்டோ 3 மற்றும் நெக்ஸான் ஆகிய 3 மின்சார கார்களில் எது சிறந்தது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
எம்ஜி வின்ட்சர் Vs பிஒய்டி ஆட்டோ 3 Vs நெக்ஸான்:
MG அதன் Windsor மின்சார காருக்கான பேட்டரியுடன் கூடிய விலையை அறிவித்துள்ளது. இந்த விலை நிர்ணயமானது, வின்ட்சர் காரை இந்திய சந்தையில் Nexon Ev மற்றும் Punch EVக்கான போட்டியாக மாற்றியுள்ளது. BYD Atto 3, இது மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தாலும், எதிர்கால தொழில்நுட்பங்கள் நிறைந்த காரை வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்நிலையில் புதிய MG CUV மற்றும் பிரபலமான Tata EV மற்றும் BYD Atto 3 இன் புதிய ஒற்றை மோட்டார் வேரியண்டின் விவரக் குறிப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை ஒப்பீடாக கீழே வழங்கப்பட்டுள்ளன.
எம்ஜி வின்ட்சர் Vs பிஒய்டி ஆட்டோ 3 Vs நெக்ஸான்: எது பெருசு?
வின்ட்சர் 4295 மிமீ நீளம் மற்றும் 2700 மிமீ நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது. Nexon EV 3994மிமீ நீளம் மற்றும் 2498மிமீ வீல்பேஸை கொண்டுள்ளது. அதேநேரம், ஆட்டோ 3 ஆனது 4455 மிமீ நீளம் மற்றும் 2720 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ளது. பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, வின்ட்சர் 604லி பூட் திறன் கொண்டது. நெக்ஸான் ஈவிக்கு 350லி பூட் ஸ்பேசையும் மற்றும் BYD Atto 3 440லி பூட் ஸ்பேசையும் கொண்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸை பொறுத்தவரையில் வின்ட்சர் 184 மிமீ , ஆட்டோ 3 ஆனது 175 மிமீ மற்றும் நெக்ஸான் ஈவி 190 மிமீ அளவை கொண்டுள்ளது.
எந்த காரில் அதிக அம்சங்கள் உள்ளன?
வின்ட்சரில் 15.6 அங்குல தொடுதிரை, நிலையான பனோரமிக் சன்ரூஃப், குளிரூட்டப்பட்ட இருக்கைகள், பவர்ட் டிரைவர் சீட், பின் இருக்கை சாய்வு, 360 டிகிரி கேமரா, இயங்கும் ஹேண்ட்பிரேக் என பல அம்சங்கள் உள்ளன. Nexon EV ஆனது 12.3-இன்ச் தொடுதிரை, டிஜிட்டல் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, காற்றோட்டமான முன் இருக்கைகள், ஏர் ப்யூரிஃபையர், சன்ரூஃப் போன்றவற்றைக் கொண்டுள்ளது. Nexon மற்றும் Windsor ஆகிய இரண்டிலும் இன்பில்ட் செயலிகள் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்ளது. Atto 3 ஆனது 12.8-இன்ச் ரொடேட்டிங் தொடுதிரை, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு வாரியாக Nexon மற்றும் Windsor ஆனது 6 ஏர்பேக்குகள கொண்டிருக்க, Atto 3 ஆனது 7 ஏர் பேக்குகளை கொண்டுள்ளது.
அதிக ரேஞ்ச் வழங்கும் கார் எது?
Nexon EV LR ஆனது 40.5kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 465 கிமீ தூரம் பயணிக்கலாம் என கூறப்படுகிறது. வின்ட்சர் அதன் 38 kWh பேட்டரி பேக்குடன் 332 கிமீ தூரம் ரேஞ்ச் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Atto 3ல் உள்ள 49.92kWh ஆனது 468 கிமீ ரேஞ்ச் வழங்குவதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆற்றலைப் பொறுத்தவரை, வின்ட்சர் மற்ற இரண்டைப் போலவே ஒற்றை மோட்டாரைக் கொண்டுள்ளது. ஆனால் வின்ட்சரின் ஆற்றல் வெளிப்பாடு 136ps மற்றும் 200 Nm ஆகும். அதே நேரத்தில் Nexon EV 145hp மற்றும் 215 Nm ஆற்ரலையும், Atto 3 ஆனது 204hp மற்றும் 310Nm ஆற்றலையும் உருவாக்குகிறது.
எந்த கார் விலைக்கு வொர்த்?
ஒப்பிட்டளவில் மூன்று கார்களில், ரூ. 24.99 லட்சம் விலையில் Atto 3 மிகவும் விலை உயர்ந்தது அகும். அதே சமயம் Nexon EV LR விலை ரூ.19.9 லட்சமாக உள்ளது, ஆனால் தள்ளுபடிகள் Nexon EVயை மிகவும் மலிவானதாக ஆக்குகிறது. மறுபுறம் வின்ட்சர் ரூ.13.4 லட்சம் முதல் ரூ.15.4 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. Nexon EV ஆனது வரம்பு மற்றும் சக்தியின் அடிப்படையில் சிறந்த மதிப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் Atto 3 அதிக சக்தியைக் கொண்டுள்ளது. வின்ட்சர் அதிக இடவசதி மற்றும் நடைமுறைத்தன்மையைக் கொண்டுள்ளது குற்ப்பிடத்தக்கது.