MG Comet EV: சிட்டியில் சிட்டா பறக்க.. MG Comet EV இருக்கு - விலை, மைலேஜ் எப்படிங்க?
போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகர்ப்புறங்களில், சலைகளில் செல்வதற்கு ஏற்ற MG Comet EV விலை, மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார கார்களின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. இதனால், அனைத்து நிறுவனங்களும் பட்ஜெட் விலை முதல் சொகுசு கார்கள் வரை மின்சார கார்களை தயாரித்து வருகிறது.
MG Comet EV:
இந்தியாவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள எம்ஜி நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் உள்ள மின்சார கார் MG Comet EV கார். இந்த காரின் விலை, மைலேஜ், தரம் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.
இது ஒரு ஹேட்ச்பேக் கார் ஆகும். போக்குவரத்து நெருக்கடியான நகரங்களில் விரைவாகவும், எளிதாகவம் பயணிப்பதற்கான சிறந்த கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.96 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.55 லட்சம் ஆகும்.
இந்த காரில் மொத்தம் 6 வேரியண்ட்கள் உள்ளது. இதில் 3 வேரியண்ட்களில் 17.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 3 வேரியண்ட்களில் 17.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோமீ்ட்டர் வரை மைலேஜ் தருகிறது.
85 கிலோமீட்டர் வேகம்:
இந்த கார் 60 கிலோமீட்டர் வேகத்தை 6.0 நொடிகளிலும், 100 கிலோமீட்டர் வேகத்தை 6.9 நொடிகளிலும் எட்டும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. இந்த காரில் 10.25 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது.
வேரியண்ட்களும், விலைகளும்:
1. Comet EV Executive - ரூ.7.96 லட்சம்
2. Comet EV Excite - ரூ.9.07 லட்சம்
3. Comet EV Excite FC - ரூ.9.48 லட்சம்
4. Comet EV Exclusive - ரூ.10.10 லட்சம்
5. Comet EV Exclusive FC - ரூ.10.52 லட்சம்
6. Comet EV Blackstorm Edition - ரூ.10.55 லட்சம்
சிறப்புகள்:
அளவில் சிறியது இந்த கார் மிகவும் குறுகலான இடத்திலும் செல்லும் ஆற்றல் கொண்டது. 4 பேர் அமரும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் செல்வதற்கு இந்த கார் உகந்தது அல்ல. ஆனால், சென்னை போன்ற பரபரப்பான போக்குவரத்து நகரங்களில் செல்வதற்கு ஏற்ற கார் ஆகும்.
41 பிஎச்பி குதிரை ஆற்றலும், 110 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது ஆகும். எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடில் இந்த கார் உள்ளது. 3 கதவுகள் கொண்டது இந்த கார். கார் பார்ப்பதற்கு குட்டியாக இருந்தாலும் இதன் இருக்கைகள் அமர்வதற்கு ஏற்ற வகையில் உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. குரல் கட்டளை வசதி, வயர்லஸ் கனெக்டிவிட்டி வசதி உள்ளது.
பாதுகாப்பு வசதிகள்:
இரண்டு ஏர்பேக் வசதி உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதியுடன் உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி உள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் கேமரா உள்ளது. ஹில் ஹோல்ட் வசதி உள்ளது. எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக் வசதி உள்ளது.
டாடா டியாகோ மின்சார கார், ஹுண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ், டாடா டியாகோ என்ஆர்ஜி ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.





















