Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
மாருதி சுசுகி நிறுவனத்தின் Swift கார் அல்லது Baleno ஆகிய இரண்டு காரில் எந்த கார் சிறந்த கார்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசுகி நிறுவனம் ஆகும். பட்ஜெட் விலையில் பல்வேறு கார்களை தயாரித்து இந்திய சந்தையில் பலரது கார் கனவை நனவாக்கியது மாருதி சுசுகி நிறுவனம் ஆகும்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான பட்ஜெட் காரான Swift மற்றும் Baleno ஆகிய இரண்டு காரில் சிறந்த கார் எது? புத்தாண்டான 2026ல் வாங்குவதற்கு சிறந்த கார் எதுவென்று கீழே விரிவாக காணலாம்.
விலை:
Maruti Suzuki Swift காரின் தொடக்க விலை ரூபாய் 6.93 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 10.40 லட்சம் ஆகும்.
Maruti Suzuki Baleno காரின் தொடக்க விலை ரூபாய் 7.20 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.01 லட்சம் ஆகும்.
எஞ்ஜின்:
Maruti Suzuki Swift காரில் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3 சிலிண்டர்ஸ் இன்லைன், 4 வால்வ்ஸ்/சிலிண்டர் வசதி கொண்டது. Z 12E with ISS ரக எஞ்ஜின் ஆகும். சிஎன்ஜி மற்றும் பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது.
Maruti Suzuki Baleno காரிலும் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது. 4 சிலிண்டர்ஸ் இன்லைன், 4 வால்வ்ஸ்/ சிலிண்டர் உள்ளது. 1.2L VVT எஞ்ஜின் ஆகும். சிஎன்ஜி மற்றும் பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது.
மைலேஜ்:
Maruti Suzuki Swift கார் லிட்டருக்கு 24.8 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவதாக ARAI கூறுகிறது. பயனாளர்கள் 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவதாக தெரிவிக்கின்றனர். ஒரு முறை டேங்க் நிரப்பினால் 918 கிலோமீட்டர் வரை செல்லலாம்.
Maruti Suzuki Baleno கார் லிட்டருக்கு 22.35 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவதாக ARAI தெரிவிக்கிறது. 20.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு முறை டேங்க் நிரப்பினால் 827 கிலோமீட்டர் வரை செல்லலாம்.
கியர், இருக்கைகள், பெட்ரோல் டேங்க்:
Maruti Suzuki Swift காரில் மேனுவலில் 5 கியர்கள் உள்ளது. இதன் டிக்கி வசதி 265 லிட்டர் ஆகும். இதன் பெட்ரோல் டேங்க் 37 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது. 5 இருக்கைகள் 2 வரிசைகளாக உள்ளது. Power assisted (Hydraulic) ஸ்டீயரிங் உள்ளது.
Maruti Suzuki Baleno காரில் 318 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 5 இருக்கைகள் 2 வரிசைகளாக உள்ளது. 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது. Power assisted (Electric) ஸ்டீயரிங் உள்ளது.
பாதுகாப்பு:
Maruti Suzuki Swift காரில் 6 ஏர்பேக் உள்ளது. ஓட்டுனர், முன் இருக்கை பயணி, 2 பக்கவாடு, முன் இருக்கை பயணியின் பக்கவாட்டில் இந்த ஏர்பேக்குகள் உள்ளது. NCAP Rating தர பரிசோதனை செய்யவில்லை. திருட்டு அபாய எச்சரிக்கை உள்ளது. 80 கி.மீட்டருக்கு மேல் சென்றால் 1 முறை எச்சரிக்கை சத்தம் வரும். 120 கிலோமீட்டருக்கு மேல் சென்றால் தொடர்ந்து எச்சரிக்கை சத்தம் வரும்.
Maruti Suzuki Baleno காரில் 6 ஏர்பேக் வசதி உள்ளது. ஓட்டுனர், முன் இருக்கை பயணி, 2 பக்கவாடு, ஓட்டுனர் பக்கம், முன்பக்க பயணியிடம் இந்த ஏர்பேக் வசதி உள்ளது. NCAP பரிசோதனையில் 4 ஸ்டார் அளிக்கப்பட்டுள்ளது. 80 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் 1 பீப் சத்தம் வரும். 120 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் தொடர்ச்சியாக பீப் சத்தம் வரும்.
ப்ரேக்:
Maruti Suzuki Swift காரில் Anti-Lock Braking System (ABS) வசதி உள்ளது. டிஸ்க் மற்றும் ட்ரம் ப்ரேக் உள்ளது. ப்ரேக் அசிஸ்ட் வசதி உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் உள்ளது. ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி இல்லை.
Maruti Suzuki Baleno காரிலும் Anti-Lock Braking System (ABS) வசதி உள்ளது. டிஸ்க் மற்றும் ட்ரம் ப்ரேக் உள்ளது. ப்ரேக் அசிஸ்ட் வசதி உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் உள்ளது. ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உண்டு.
வாரண்டி:
Maruti Suzuki Swift கார் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளித்துள்ளனர்.
Maruti Suzuki Baleno கார் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளித்துள்ளனர்.
மேலே உள்ள தரவுகளின் அடிப்படையில் பட்ஜெட், விலை, மைலேஜ் ஆகியவற்றிற்கு ஏற்ற காரை வாங்கிக் கொள்ளலாம்.





















