இப்போ இல்லையென்றால் எப்போ? குட்டி SUV-யில் செம ஆஃபர்.. கார் லவர்ஸ்க்கு செம டீல்..
Maruti Ignis: வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சலுகைகள் மாருதி சுசூகி தரவின்படி, இக்கார் மீதான தள்ளுபடி பின்வரும் மூன்று பகுதிகளில் வழங்கப்படுகிறது

ஹாட்ச்பேக் கார்கள் மீது விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த ஜூன் மாதம் மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. நெக்சா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் மாருதி சுசூகி இக்னிஸ் மீது ரூ.62,100 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜூன் 30, 2025 வரை மட்டுமே இருக்கும் மாருதி சூசுகி என நிறுவனம் அறிவித்துள்ளது.
என்னென்ன சலுகைகள் இருக்குன்னு பார்ப்போமா?
வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சலுகைகள் மாருதி சுசூகி தரவின்படி, இக்கார் மீதான தள்ளுபடி பின்வரும் மூன்று பகுதிகளில் வழங்கப்படுகிறது:
-
வாடிக்கையாளர் சலுகை – ரூ.30,000 வரை
-
பரிமாற்ற சலுகை (Exchange Bonus) – ₹15,000 முதல் ₹30,000 வரை
-
கார்ப்பரேட் சலுகை – ₹2,100 வரை
பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு – ₹62,100 வரை
பெட்ரோல் மேனுவல் மாடலுக்கு – ₹57,100 வரை
குறிப்பு: இந்த சலுகைகள் நகரங்களின்படி, டீலர்களின்படி மாறக்கூடியவை. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது அருகிலுள்ள நெக்சா டீலரில் முன்பே சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
புதிய தொழில்நுட்பத்துடன் கூடியா Suzuki TECT (Total Effective Control Technology) பாதுகாப்பான என்ஜின் இக்னிஸ் காரில் பயன்பாட்டில் உள்ளது. இது வாகனத்தின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துகிறது.
Suzuki TECT safety tech உங்க பாதுகாப்புக்காக இருக்குது. அதோடே, 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்:
-
பவர்: 83 PS
-
டார்க்: 113 Nm
-
மைலேஜ்: 20.89 கி.மீ./லிட்டர்
கியர் பாக்ஸ்: 5-speed manual மற்றும் AMT
Radiance Edition – ஸ்டைலுக்கு மேல ஸ்டைல் தான்!
புதிய Radiance Edition-ல:
-
ஸ்டைலிஷ் இன்டீரியர்
-
மேம்பட்ட வெளிப்புற டிசைன்
புதிய Radiance Edition-ல் சில வெளிப்புற ஸ்டைலிங் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என்ஜின் தொடர்பான எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்த மாடல்:
நவீன இன்டீரியர் மேம்பட்ட வெளிப்புற தோற்றம் கொண்டது.
புதிய வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இக்னிசில் வழங்கப்படும் முக்கிய அம்சங்கள்:
- 7 இன்ச் டட்ச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (Apple CarPlay மற்றும் Android Auto ஆதரவு)
- புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல்
- ஹைட் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட்
- ஸ்டீரிங் மவுண்டட் கன்ட்ரோல்கள்
- டிஎஃப்டி இன்ஃபோ டிஸ்ப்ளே
பாதுகாப்பு அம்சங்கள்: பயணிகளை பாதுகாக்கும் தொழில்நுட்பம்
- டூயல் ஏர்பேக்
- ஏபிஎஸ் உடன் ஈபிடி
- ESC (Electronic Stability Control)
- ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா
இத்தனை வண்ணங்கள்ல இருக்கா?
சிங்கிள் நிறங்கள் (7):
நெக்சா ப்ளூ, லூசென்ட் ஆரஞ்சு, சில்கி சில்வர், டர்காய்ஸ் ப்ளூ, கிரே, வைட், பிளாக்
டூயல் டோன் நிறங்கள் (3):
ஆரஞ்சு + பிளாக் ரூஃப், நெக்சா ப்ளூ + சில்வர்/பிளாக் ரூஃப்
வாங்குவதற்கு சரியான நேரம்:
சிறந்த ஸ்டைல், பாதுகாப்பு மற்றும் சலுகை மாருதி இக்னிஸ், ஸ்டைலான தோற்றம், நவீன வசதிகள் மற்றும் நம்பகமான செயல்திறனுடன் ஹாட்ச்பேக் கார்களில் சிறந்த தேர்வாக உள்ளது. தற்போது வழங்கப்படும் தள்ளுபடி சலுகைகளும் கூட, இது வாங்கும் நேரம் இது தான் என உறுதி செய்கிறது.






















