Mahindra Thar ROXX: அட்ராசக்க! 5 கதவுகள், சன்ரூஃப்! சுதந்திர தினத்தில் வருகிறது தார் ராக்ஸ்!
Thar ROXX: மகேந்திரா நிறுவனத்தின் 5 கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.
![Mahindra Thar ROXX: அட்ராசக்க! 5 கதவுகள், சன்ரூஃப்! சுதந்திர தினத்தில் வருகிறது தார் ராக்ஸ்! Mahindra Thar ROXX Gets Panoramic Sunroof Thar 5 Door Interior Details Latest Photo Mahindra Thar ROXX: அட்ராசக்க! 5 கதவுகள், சன்ரூஃப்! சுதந்திர தினத்தில் வருகிறது தார் ராக்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/aac7ed35ab5f1f75309b179a6b1b20d01722256442313224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவின் வாகனங்களின் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கார்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கார் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்பவும், அவர்களின் தேவைக்கு ஏற்பவும் புதிய ரக கார்கள் சந்தைக்கு அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறது.
தார் ராக்ஸ்:
அந்த வகையில், இந்தியாவில் வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் மகேந்திரா ஆகும். அவர்களின் ஒவ்வொரு வகை கார்களுக்கும் என்று ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அந்த வகையில், பெருவாரியான வாடிக்கையாளர்களை கொண்ட வாகனமாக மகேந்திராவின் தார் உள்ளது.
மகேந்திராவின் தார் காரை வைத்திருப்பதை இன்றைய தலைமுறையினர் பலரும் விரும்புகின்றனர். இந்த நிலையில், தார் காரின் புது வடிவத்தை மகேந்திரா அறிமுகப்படுத்த உள்ளது. நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி தார் ராக்ஸ் அறிமுகமாக உள்ளது.
5 கதவுகள், பனோரமிக் சன்ரூஃப்:
5 கதவுகளுடன் அறிமுகமாக உள்ள இந்த காரில் பிரத்யேக வசதியாக வானை ரசிக்கும் பனோரமிக் சன்ரூஃப் இடம்பெற்றுள்ளது. மெட்டாலிக் ரூஃப்பாக இந்த கூரை வடிவமைக்கப்பட்டுள்ளது. தார் காரின் ஆஸ்தான நிறமான கருப்பு நிறத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடுதிரை கொண்ட டேஷ்போர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வடிவ தார் ராக்ஸ் காரின் முகப்பு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. புது மாடலான தார் ராக்ஸ் காரை இயக்குவதற்கு பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னால் மற்றும் பின்னால் பார்க் செய்வதற்கான சென்சார் வசதியும் இடம்பெற்றுள்ளது.
360 டிகிரி கேமரா:
இந்த புதுரக தார் ராக்ஸ் காரில் 19 இன்ஞ் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. இது கடினமான சாலைகளிலும் வாகனத்தை மிக மென்மையாக இயக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஒயர்லெஸ் மொபைல் சார்ஜர் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, 360 டிகிரி கேமரா இந்த வாகனத்தின் சிறப்பு அம்சம் ஆகும். தார் ராக்ஸ் ஃப்ரீ லைப்ஸ்டைல் ஆஃப் ரோடர் வாகனம் ஆகும்.
மேலும் படிக்க: Harley Davidson Bikes: காண்போரை ஆச்சரியப்படுத்தும் ஹார்லி டேவிட்சன் - இந்தியாவில் கிடைக்கும் 6 சிறந்த பைக்குகள்
மேலும் படிக்க: Acceleration Bikes: மின்னல் வேகம் - விர்ரென 100கிமீ, அதிவேக ஆக்ஸிலேட்டர் கொண்ட பைக்குகள் - டாப் 5 லிஸ்ட் இதோ..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)