(Source: ECI/ABP News/ABP Majha)
Acceleration Bikes: மின்னல் வேகம் - விர்ரென 100கிமீ, அதிவேக ஆக்ஸிலேட்டர் கொண்ட பைக்குகள் - டாப் 5 லிஸ்ட் இதோ..!
Acceleration Bikes: ஆட்டோமொபைல் சந்தையில் அதிவேக ஆக்ஸிலரேஷன் கொண்ட, மோட்டார்சைக்கிள்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Acceleration Bikes: ஆட்டோமொபைல் சந்தையில் அதிவேக ஆக்ஸிலரேஷன் கொண்ட, டாப் 5 மோட்டார்சைக்கிள்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டுகாட்டி டியவல் 1260எஸ்
டுகாட்டி டியவல் 1260S ஆனது உலகளவில் வேகமான பைக்குகளின் வரிசையில் உள்ளது. வெறும் 2.5 வினாடிகளில், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய திறனை கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 1262 சிசி இரட்டை இன்ஜின் மூலம், 156 பிஎச்பி பவர் மற்றும் 128 என்எம் டார்க் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விலை சுமார் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
2013 BMW S1000RR
2013 BMW S1000RR டிராக்-ஒன்லி மோட்டார் சைக்கிள், சட்டப்பூர்வமான பொதுவெளி பயன்பாட்டிற்கான எடிஷனாக சந்தைப்படுத்தப்பட்டது. விதிவிலக்கான செயல்திறனை வழங்கியது. இதன் ஆற்றல் 999 cc இன்லைன் 4-சிலிண்டர் இன்ஜினிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இது 190 bhp ஆற்றலையும் 111 Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை 2.6 வினாடிகளில் எட்டுவது அதன் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய அம்சங்களில் ஒன்றாகும். இதன் விலை 20 லட்ச ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
கவாஸாகி நிஞ்ஜா ZX-12R
கவாஸாகி இசட்எக்ஸ்-14ஆர் ஒரு ஸ்போர்ட்ஸ் டூரராக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கண்ணிமைக்கு நேரத்தில் உங்களை கடந்து செல்லும் வகையிலான சக்தியை உருவாக்கும் பெரிய இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வாகனம் 1441 சிசி இன்லைன் 4-சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 197 குதிரைத்திறன் மற்றும் 153 என்எம் அதிகபட்ச முறுக்குவிசையை வழங்குகிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை 2.6 வினாடிகளில் எட்டுகிறது. இதன் விலையும் குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
கவாசாகி நிஞ்ஜா எச்2
கவாஸாகி அதீத செயல்திறன் கொண்ட பல வாகனங்களை உருவாக்கியுள்ளது. அத்தகைய வாகனங்களில் கூட, H2 உச்சநிலையில் நிற்கிறது. இந்த பைக்கில் 197 பிஎச்பி பவரையும், 133 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட 998 சிசி இன்லைன் 4-சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை 2.6 வினாடிகளில் எட்டுகிறது. இதன் விலையும் குறைந்தபட்சம் 39 லட்ச ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
EBR 1190RX:
EBR 1190RX இந்த பட்டியலில் உள்ள மற்ற மாடல்களுடன் ஒப்பிடும் போது அதிகம் அறியப்படாத பைக்குகளில் ஒன்றாக உள்ளது. இந்த மாடல் எரிக் பியூல் ரேசிங்கின் முதல் தயாரிப்பு பைக் மற்றும் 1190 சிசி வி-ட்வின் இன்ஜினிலிருந்து 182 பிஎச்பி ஆற்றலையும் 136 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்தது. இது 0-100 கிமீ வேகத்தை 2.6 வினாடிகளில் அடையும் திறன் கொண்டது. இதன் விலையும் குறைந்தபட்சம் 8.4 லட்ச ரூபாயிலிருந்து தொடங்குகிறது.