மேலும் அறிய

Harley Davidson Bikes: காண்போரை ஆச்சரியப்படுத்தும் ஹார்லி டேவிட்சன் - இந்தியாவில் கிடைக்கும் 6 சிறந்த பைக்குகள்

Harley Davidson Bikes: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் சிறந்த பைக்குகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Harley Davidson Bikes: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 6 சிறந்த பைக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சன் X440: ரூ 2.40 லட்சம்

ஹார்லி டேவிட்சன் X440 என்பது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட, இந்திய சந்தைக்கான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் வாகனம் ஆகும். ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வீழ்த்தும் நோக்கத்துடன் இது அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதைச் செய்வதில் இன்னும் முழுமையாக வெற்றிபெறவில்லை.  440cc BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 27 bhp ஆற்றலையும் 38 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த X440 பைக் 190.5 கிலோ எடையும், 13.5 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவும் கொண்டது.

ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்: ரூ 16.48 லட்சம்

ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் இந்தியாவில் விற்கப்படும் தனித்துவமான தோற்றமுடைய ஹார்லி வாகனங்களில் ஒன்றாகும். 16.48 லட்சத்தில் மிகவும் மலிவு விலையில் உள்ள மோட்டார்சைக்கிள் இல்லை என்றாலும், இது மிட்செக்மெண்டில் உள்ளது. 1252சிசி பிஎஸ்6 இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு,  120.69 பிஎச்பி ஆற்றலையும் 125 என்எம் முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. எரிபொருள் தொட்டியின் கொள்ளளவு 11.8 லிட்டர்.

ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாப்: ரூ 21.48 லட்சம்

ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாப் புகழ்பெற்ற அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டின் மிகவும் பிரபலமான க்ரூஸர் பைக்குகளில் ஒன்றாக உள்ளது. ஃபேட் பாப் என்பது 1868சிசி பிஎஸ்6 இன்ஜின் மூலம் இயக்கப்படும் ஒரு மஸ்குலர் ஹெவிவெயிட் இருசக்கர வாகனமாகும். இது 92.5 பிஎச்பி ஆற்றலையும் 155 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த பைக்கில் 13.2 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர்: ரூ 13.38 லட்சம்

ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் ஒரு பிரபலமான மாடலாக இருப்பதோடு, இது இன்னும் விண்டேஜ் தோற்றத்தைக் கொண்டுள்ளது. 975சிசி பிஎஸ்6 இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு,  88.5 பிஎச்பி ஆற்றலையும் 95 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த பைக்கில் 11.7 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது.

ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய்: ரூ 25.69 லட்சம்

ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய் அதன் டெர்மினேட்டர் 2 அறிமுகத்தின் மூலம் பிரபலமானது. தற்போது வரையும் பிராண்டின் கவர்ச்சியை பிரதிபலிக்கும் பைக்காக தொடர்கிறது. இதில் உள்ள 1868சிசி பிஎஸ்6 இன்ஜின் 93.87 பிஎச்பி ஆற்றலையும் 155 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதன் எரிபொருள் டேங்க் 18.9 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

ஹார்லி டேவிட்சன் பிரேக்அவுட்: ரூ 30.99 லட்சம்

ஹார்லி-டேவிட்சன் பிரேக்அவுட் அதன் முரட்டுத் தன்மைக்காக அறியப்படுகிறது.  சினிமா மற்றும் விளையாட்டு உலகைச் சேர்ந்த பிரபலங்கள் மத்தியில் இந்த வாகனம் மிகவும் பிரபலமானது. இது 1923சிசி பிஎஸ்6 எஞ்சின் மூலம், 101.9 பிஎச்பி ஆற்றலையும் 168 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. முன் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக்குகளுடன் ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget