மேலும் அறிய

Jeep Meridian 5-seater vs Compass: ஜீப் மெரிடியன் 5 சீட்டர் Vs காம்பஸ் - எது கெத்து, பணத்துக்கு வர்த்து? விவரங்கள் இதோ..!

Jeep Meridian 5-seater vs Compass: ஜீப் மெரிடியன் 5 சீட்டர் மற்றும் காம்பஸ் ஆகிய கார் மாடல்களின் ஒப்பீட்டை இந்த தொகுப்பில் அறியலாம்.

Jeep Meridian 5-seater vs Compass: ஜீப் மெரிடியன் 5 சீட்டர் மற்றும்  காம்பஸ் ஆகியவற்றின், விலை, அம்சங்கள் ஆகியவை கீழே ஒப்பிடப்பட்டுள்ளன.

ஜீப் மெரிடியன் 5 சீட்டர் Vs  காம்பஸ்:

ஜீப் சமீபத்தில் மெரிடியனுக்கான மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தியது. அதில், மாடலின் ஆரம்ப விலை ரூ.6 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய மெரிடியன் காரானது ரூ. 24.99 லட்சம் முதல் ரூ. 38.49 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. குறிப்பாக எண்ட்ரி லெவல் காரானது புதிய விருப்பமான 5-சிட்டர் அம்சத்தில் கிடைக்கிறது. இதன் காரணமாக, காம்பஸை (ரூ. 18.99 லட்சம்-32.41 லட்சம்) காட்டிலும் முன்பை விட  சிறப்பானதாக விளங்குகிறது. 

மெரிடியனின் எண்ட்ரி லெவல் லாங்கிட்யூட் வேரியண்ட் மட்டுமே  5 சீட்டர் அமைப்பைக் கொண்டுள்ளது. மீதமுள்ள வேரியண்ட்கள் 7-சீட்டர் அமைப்புடன் தொடர்கிறது. மெரிடியனின் எண்ட்ரி லெவல் வேரியண்ட், அதேபோன்ற விலையுள்ள காம்பஸின் மிட்-ரேஞ்ச் வேரியண்ட்களுக்கு எதிராக எவ்வாறு நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே அறியலாம்.

ஜீப் மெரிடியன் vs காம்பஸ்: வசதிகள்

மெரிடியன் லாங்கிட்யூட் vs காம்பஸ் லாங்கிட்யூட் (ஓ), நைட் ஈகிள் (ஓ)

ரூ.24.83 லட்சம் விலையுள்ள காம்பஸ் லாங்கிட்யூட் (O), ரூ. 25.18 லட்சம் விலையுள்ள நைட் ஈகிள் (O) ஆகியவை,  ரூ.24.99 லட்சம் விலையுள்ள எண்ட்ரி லெவல் மெரிடியன் லாங்கிட்யூட் உடன் போட்டியிடும் இரண்டு வகைகளாகும். காம்பஸ் லாங்கிட்யூட் (O) இல் இல்லாத சில அம்சங்களை மெரிடியன் கொண்டுள்ளது. அதன்படி,  எல்இடி டெயில் லேம்ப்கள், இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கான சாய்வு செயல்பாடு, மழை சென்சார் வைப்பர்கள் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவை இதில் அடங்கும். ஆனால் காம்பஸ் லாங்கிட்யூட் (O) பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் முன்பக்க மூடுபனி விளக்குகளுடன் வருகிறது. அதேநேரம்,,  இவை நுழைவு நிலை மெரிடியனில் இல்லை.

மெரிடியன் மற்றும் காம்பஸ் நைட் ஈகிள் (O) மாடல்கள் 18-இன்ச் அலாய் வீல்களைப் பெறுகிறது. காம்பஸ் லாங்கிட்யூட் (O) 17 ன்ச் அலாய் வீல்களை பெற்றுள்ளது. நைட் ஈகிள் (O) என்பது , காம்பஸ் லாங்கிட்யூட் (O) அடிப்படையிலான ஒரு சிறப்பு எடிஷனாகும். இதில் முன் மற்றும் பின்புற டேஷ்கேம், பின்புற பொழுதுபோக்கு யூனிட், பிரீமியம் கார்பெட் பாய்கள், அண்டர்பாடி லைட்டிங், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் காற்று சுத்திகரிப்பான் ஆகியவை அடங்கும். இது ல்மிடெட் எடிஷன் மாடல் மற்றும் மெரிடியன் லாங்கிட்யூட்டை விட சிறந்த உபகரணப் பட்டியலை வழங்குகிறது.

மெரிடியன் லாங்கிட்யூட் AT vs Compass Limited (O) AT

மெரிடியன் லாங்கிட்யூட் ஏடியின் விலை ரூ.28.49 லட்சம், காம்பஸ் லிமிடெட் (ஓ) ஏடியின் விலை ரூ.28.33 லட்சம். இந்த பிரிவில், எக்யூப்மெண்ட் சாதனத்தின் முன்பக்கத்தில் சிறந்ததாக உள்ளது. அதாவது, மெமரி ஃபங்க்‌ஷனுடன் 8-வே பவர்ட் டிரைவர்ட் இருக்கை, லெதர் ஸ்டீயரிங் வீல், டோர் ஸ்கஃப் பிளேட்கள் மற்றும் ரியர்வியூ மிரர் உள்ளே ஒரு ஆட்டோ டிம்மிங் போன்ற அம்சங்களைப் பெருகிறது. எனவே, மெரிடியன் லாங்கிட்யூட் ஏடியை வாங்க விரும்புபவர், கூடுதல் ஃபீல்-குட் அம்சங்களின் காரணமாக காம்பஸ் லிமிடெட் (O) ATஐயும் தேர்வு செய்யலாம்.

ஃபேஸ்லிஃப்ட்டுடன், மெரிடியன் இப்போது அதே விலையில் உள்ள காம்பஸ் வேரியண்ட்களை விட பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குகிறது. அளவு பெரியதாக இருப்பதால், அதிக கேபின் இடம் கிடைக்கும். இருப்பினும், காம்பஸ் செலுத்துவதற்கு குறிப்பாக, நகரங்களில் பயணிக்க சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. காம்பஸ் சிறந்த உபகரணப் பட்டியலையும் வழங்குகிறது. நீங்கள் அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்தால், காம்பஸ் சிறந்த தேர்வாக இருக்கும். இருப்பினும், இடம் மிகவும் முக்கியமானது என்றால், ஒருவர் மெரிடியனை தேர்வு செய்யலாம்.

ஜீப் மெரிடியன் vs காம்பஸ்: இன்ஜின் விவரங்கள்

காம்பஸை காட்டிலும் மேலடுக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள மெரிடியன் ஒரு பெரிய SUV ஆகும்.  இது முதலில் காம்பஸின் மூன்று-வரிசை எடிஷனாக அறிமுகப்படுத்தப்பட்டது.  364மிமீ நீளம், 41மிமீ அகலம், 58மிமீ உயரம் மற்றும் காம்பஸை விட 146மிமீ நீளமான வீல்பேஸ் கொண்டது. 5 சீட்டர் மெரிடியன் 670 லிட்டர் அளவிலும்,  காம்பஸ் 438 லிட்டர் அளவிலும் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது..

இரண்டு SUVகளிலும் ஒரே 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 170hp மற்றும் 350Nm பீக் டார்க்கை வெளியிடுகிறது. யூனிட் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது விருப்பமான 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget