6ஜியை விடுங்க.. வரப்போது ஹோண்டா Activa 7G.. மைலேஜ், விலையை கேட்டா அசந்துடுவீங்க!
வாடிக்கையாளர்களை மேலும் கவரும் வகையில் ஹோண்டா நிறுவனம் Activa 7G மாடலை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் ஸ்கூட்டர் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது ஆக்டிவா ஆகும். ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பாக ஆக்டிவா சந்தையில் விற்பனையாகி வருகிறது. ஆக்டிவாவின் 6ஜி தற்போது சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், இதன் அடுத்த அப்டேட்டை ஹோண்டா வெளியிட திட்டமிட்டுள்ளது.
Honda Activa 7G:
ஹோண்டா ஆக்டிவா 6ஜியின் அடுத்த வெர்சனாக ஹோண்டா activa 7G-யை அறிமுகப்படுத்த ஹோண்டா முடிவு செய்துள்ளது. ஹோண்டா ஆக்டிவா 7ஜி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆக்டிவாவைப் போல வாடிக்கையாளர்கள் எளிதில் வாங்கும் வகையில் இதன் விலை இருக்கும் என்றே கருதப்படுகிறது.
இது EV EPluto 7G, TVS Jupiter மற்றும் Hero Pleasure + Xtec ஆகியவற்றிற்கு கடும் சவால் அளிக்கும் வகையில் இந்த ஆக்டிவா 7ஜியை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, சந்தையில் விற்பனையாகும் TVS Jupiter CNG-க்கு கடும் சவால் அளிக்கும் வகையில் இந்த ஆக்டிவா 7ஜி தயாரிக்கப்பட்டு வருகிறது.
விலை எவ்வளவு?
இது விற்பனைக்கு வந்தால் இதன் விலை 80 ஆயிரம் முதல் ரூபாய் 90 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6ஜி ஆக்டிவாவில் இருந்து பல்வேறு அதிநவீன வசதிகளுடன் இதை சந்தைக்கு அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. பல வண்ணங்களிலும், சில வித்தியாசமான வேரியண்ட்களிலும் இதை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
மோட்டார் சந்தையில் வெளியாகியுள்ள தகவலின்படி, ஹோண்டா ஆக்டிவா 7ஜியில் 109 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. ஒற்றைச் சிலிண்டர், ஏர் கூல்ட் எஞ்ஜினாகவும் இது இயங்க உள்ளது. இந்த எஞ்ஜின் மோட்டார் 7.6 பிஎச்பி திறன் கொண்டதாகவும், 8.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
மைலேஜ் எப்படி?
சந்தைக்கு அறிமுகமாக உள்ள ஹோண்டா ஆக்டிவா 7ஜி 45 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் என்று கருதப்படுகிறது. ஆக்டிவா 6ஜியே 60 கி.மீட்டர் வரை மைலேஜ் தருவதால் இதன் மைலேஜ் நிச்சயம் அதற்கு மேல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றே கருதப்படுகிறது. இந்த ஆக்டிவா 7ஜி அடுத்தாண்டு ஜனவரியில் சந்தையில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக டிவிஎஸ், சுசுகி நிறுவனங்களின் ஸ்கூட்டர்களும், மின்சார இ ஸ்கூட்டர்களும் கடும் சவால் அளித்து வருகின்றனர். அவர்களின் போட்டியில் இருந்து வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் ஹோண்டா நிறுவனம் தங்களது மிகப்பெரிய வெற்றி படைப்பான ஆக்டிவா-வை அடுத்தடுத்த வெர்சன்களில் உருவாக்கி வருகிறது.
பெட்ரோல் டேங்க் தாங்கும் டேங்க் திறன், வேரியண்ட்கள், நிறம் ஆகியவை ஆக்டிவா 6ஜியில் இருந்து சற்று முன்னோக்கி இருக்கும் வகையில் இந்த 7ஜி உருவாக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலையிலும், நகர்ப்புறங்களின் போக்குவரத்து நெரிசலிலும் எப்படி ஆக்டிவா 6ஜி சிறப்பான பயன்பாட்டிற்கு வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு ஆக்டிவா 7ஜியையும் சந்தையில் கொண்டு வரும் எண்ணத்தில் ஆக்டிவா 7ஜியை ஹோண்டா தயாரித்து வருகிறது.





















