மேலும் அறிய

ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?

BYD Atto 3 காரின் மைலேஜ், சிறப்பம்சங்கள், விலை குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் சமீப ஆண்டாக மின்சார கார்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

BYD கார்:

டாடா உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மின்சார கார் தயாரிப்பில் கோலோச்சி வரும் நிலையில், BYD நிறுவனத்தின் BYD Atto 3 காரின் தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். 

இந்த கார் ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். இந்த காரில் 5 இருக்கைகள் உள்ளது. 7.3 நொடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது.  இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 26.42 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 35.97 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது.

1. Atto 3 Dynamic - ரூபாய் 26.42 லட்சம்

2. Atto 3 Premium - ரூபாய் 31.51 லட்சம்

3. Atto 3 Superior - ரூபாய் 35.97 லட்சம்

Atto 3 Dynamic:

இந்த Atto 3 Dynamic காரில் 49.92 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 468 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.

Atto 3 Premium:

இந்த காரில் 60.48 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. 

Atto 3 Superior:

இந்த Atto 3 Superior காரில் 60.48 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது.

சிறப்புகள் என்ன?

இந்த காரின் 3 வேரியண்ட்களும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் ஆகும். இந்த காரின் வசீகரமான தோற்றமும், உட்கட்டமைப்பு வசதியும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. 440 லிட்டர் வரை டிக்கி வசதி கொண்டது. அடாஸ் பாதுகாப்பு வசதியை கொண்டது. 

201 பிஎச்பி குதிரைத் திறன், 310 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த காரின் டிராகன் ஃபேஸ் 3.0 தோற்றம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், அலாய் சக்கரங்கள் இதில் உள்ளது. 

7 ஏர்பேக்:

இந்த காருக்கு யூரோஎன்சிஏபி-வின் 5 ஸ்டார் பாதுகாப்பு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதன் கேபின் மிகவும் வசதியானதாக உள்ளது. இருக்கைகள் ஓட்டுவதற்கு மிகவும் வசதியானதாகவும், செளகரியமாகவும் உள்ளது. 360 டிகிரி கேமரா, பனோராமிக் சன்ரூஃப், எட்டு ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், மொபைல் போன் வயர்லஸ் சார்ஜர், பஞ்சர் கிட் போன்ற பல்வேறு வசதிகள் இதில் உள்ளது. இந்த காரில் 7 ஏர் பேக் வசதிகள் உள்ளது.

மஹிந்திராவின் XEV 9e, டாடா ஹாரியர் இவி, வின்ஃபாஸ்ட் விஎஃப்7 ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் சந்தையில் உள்ளது.

தலைப்பு செய்திகள்

Maruti Suzuki Celerio on EMI: மைலேஜ்ல இத அடிச்சுக்க காரே கிடையாது.! மாருதி செலரியோ வாங்க முன்பணம், EMI எவ்வளவு.? தெரிஞ்சுக்கோங்க
மைலேஜ்ல இத அடிச்சுக்க காரே கிடையாது.! மாருதி செலரியோ வாங்க முன்பணம், EMI எவ்வளவு.? தெரிஞ்சுக்கோங்க
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
பைக் பிரியர்களுக்கு டபுள் ட்ரீட்! Yamaha R15 V4 & MT-15 MotoGP எடிஷன் மாஸ் லாஞ்ச்! விலை என்ன?
பைக் பிரியர்களுக்கு டபுள் ட்ரீட்! Yamaha R15 V4 & MT-15 MotoGP எடிஷன் மாஸ் லாஞ்ச்! விலை என்ன?
Scorpio N Facelift வாங்கப் போறீங்களா? புதிய விலையும், புதிய சிறப்பம்சங்களும் வந்துருக்கு? இதுதான்
Scorpio N Facelift வாங்கப் போறீங்களா? புதிய விலையும், புதிய சிறப்பம்சங்களும் வந்துருக்கு? இதுதான்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget