Scorpio N Facelift வாங்கப் போறீங்களா? புதிய விலையும், புதிய சிறப்பம்சங்களும் வந்துருக்கு? இதுதான்
Scorpio N Facelift 2026 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்தியாவின் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இவர்களின் கார்களுக்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
இவர்களின் வெற்றிகரமான கார்களில் ஒன்று Scorpio. இந்த காரின் அப்டேட் வெர்சனாக அறிமுகமானது Scorpio N facelift. இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பல்வேறு மாற்றங்களுடன் நடப்பாண்டிற்கு இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Scorpio N facelift:
இதன் தொடக்க விலை ரூபாய் 13.69 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் 25.49 லட்சம் ரூபாய். சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடப்பாண்டிற்கா Scorpio N facelift காரின் எந்தெந்த வேரியண்ட் என்னென்ன விலை என்பதை காணலாம்.
| வேரியண்ட் | மேனுவல் | ஆட்டோமெட்டிக் |
| Z2 | ரூபாய் 13.69 லட்சம் | |
| Z4 | ரூபாய் 15.57 லட்சம் | ரூபாய் 17.16 லட்சம் |
| Z6 | ---------- | ---------- |
| Z8S | ரூபாய் 17.79 லட்சம் | ரூபாய் 19.26 லட்சம் |
| Z8 | ----- | ------ |
| Z8T | ரூபாய் 20.38 லட்சம் | ரூபாய் 21.75 லட்சம் |
| Z8L (Adas) 7 Seater | ரூபாய் 21.31 லட்சம் | ரூபாய் 22.87 லட்சம் |
| Z8L (Adas) 6 Seater | ரூபாய் 21.69 லட்சம் | ரூபாய் 23.05 லட்சம் |
2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. 6 கியர்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் உள்ளது.
பனோராமிக் சன்ரூஃப், 540 டிகிரி சர்ரவுண்ட் கேமரா வசதி உள்ளது. ப்ளைண்ட் வியூ மானிட்டர் வசதி உள்ளது. 65 வாட் யுஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜர் வசதி உள்ளது.
| வேரியண்ட் | 2 WD மேனுவல் | 2 WD ஆட்டோமெட்டிக் | 4WD மேனுவல் |
| Z2 | ரூபாய் 14.19 லட்சம் | ----- | ----- |
| Z4 | ரூபாய் 16.12 லட்சம் | ரூபாய் 17.68 லட்சம் | ரூபாய் 18.03 லட்சம் |
| Z6 | ரூபாய் 17.17 லட்சம் | ரூபாய் 18.82 லட்சம் | ----- |
| Z8S | ரூபாய் 18.79 லட்சம் | ரூபாய் 19.89 லட்சம் | ------ |
| Z8 | ரூபாய் 19.86 லட்சம் | ரூபாய் 21.41 லட்சம் | ----- |
| Z8T | ரூபாய் 20.65 லட்சம் | ரூபாய் 22.25 லட்சம் | ரூபாய் 22.86 லட்சம்/ ரூபாய் 24.39 லட்சம் (AT) |
| Z8L (Adas) 7 Seater | ரூபாய் 21.99 லட்சம் | ரூபாய் 23.49 லட்சம் | ரூபாய் 24.25/25.49 லட்சம் |
| Z8L( Adas) 6 Seater | ரூபாய் 22.47 லட்சம் | ரூபாய் 23.80 லட்சம் | ---------- |
ட்ரெண்டிங் செய்திகள்






















