மேலும் அறிய

E Scooter Defects : இ-ஸ்கூட்டர்கள் தீப்பிடித்ததற்கு இதுதான் காரணம்.. DRDO ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

உற்பத்தி விலையை குறைப்பதற்காக, பேட்டரியின் தரத்தில் சமரசம் செய்து கொண்டதன் விளைவே, அவை தீப்பிடித்து எரிவதற்கு காரணம் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சமீப காலமாக நடந்துவரும் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவது அனைவரிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  இ-ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பிடிப்பதற்கான காரணத்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, (டி.ஆர்.டி.ஓ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 

எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தி விலையை குறைப்பதற்காக, பேட்டரியின் தரத்தில் சமரசம் செய்து கொண்டதன் விளைவே, அவை தீப்பிடித்து எரிவதற்கு காரணம் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தரம் குறைவான பேட்டரி, போதுமான அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாதது,  ஆகியவைகளே எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்கள் தரத்தோடு சந்தைக்கு விற்பனைக்கு வராததற்கு காரணம். எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் காலத்தில், உற்பத்திக்கு ஆகும் செலவை குறைக்கு, இருசக்கர வாகனத்தின் முதன்மையான பாகங்களை தரம் இல்லாமல் பயன்படுத்தியிருக்கலாம். அதனால்தான், பயன்படுத்த தொடங்கிய குறைந்த காலத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

மேலும், இந்தியாவில் பயன்படுத்தப்போகும் எலக்ட்டானிக் வாகனங்களுக்கு, வெளிநாட்டில் இருந்து செல் உள்ளிட்ட உள் பாகங்களை இறக்குமதி செயது அதை பயன்படுத்துவது நம் நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு பொருந்தாது.

பெட்ரோல், டீசல் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு, மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வரும் 2030 ஆண்டிற்குள் இந்தியாவில் 80 சதவீதம் எலக்ட்ரானிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது அரசு. இந்தியாவில் எலக்ட்ரானிக் வாகனங்களின் பயன்பாடு தற்போது 2 சதவீதமாக இருக்கிறது. 

ஆனால், பயனாளர்கள் இன்னும் எலக்ட்ட்ரானிக் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றன. அதற்கு முதன்மையான காரணம், கடந்த ஆண்டில் இருந்து இதுவரை 9 எலக்ராடின் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், இ-ஸ்கூட்டர்களின் மீதான அதிருப்தியையும் அதிகரித்துள்ளது.

முன்னணி நிறுவனங்களாக ஓலா உள்ளிட்ட நிறுவனங்களின் இ-ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் குறித்து டி.ஆர்.டி.ஓ.-வின் கீழ் இயங்கும் The Centre for Fire, Explosive and Environment Safety துறையிடம் காரணங்களை ஆராயுமாறு மத்திய அரசு அறுவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையி, தற்போது ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. 

மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவில் எலக்ட்ரானி ஸ்கூட்டர் தயாரிப்பவர்கள் AIS-156  என்ற பாதுகாப்பு தர மதிப்பீடு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தரமதிப்பீடு இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள AIS-048 பாதுகாப்பு தரமதிப்பீடு முறை இந்தாண்டு மட்டுமே நடைமுறையில் இருக்கும். 

AIS-156 தர மதிப்பீடு பரிசோதனை, ஷாட் சர்க்யூட், ஓவர் சார்ஜிங், வாகனத்தில் ஆணி ஏறுவது உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் இ.ஸ்கூட்டரின் செயல்பாடு சிறப்பாக, அதாவது எவ்வித அசாம்பாவிதமும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே வாகன விற்பனை அனுமதி வழங்கப்படும். 

மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Embed widget