ஒரே சார்ஜில் 155 கிலோ மீட்டர் மைலேஜ்.. Bajaj Chetak இ ஸ்கூட்டரில் பறக்கலாம் - விலை என்ன?
Bajaj Chetak: பஜாஜ் நிறுவனத்தின் Bajaj Chetak இ ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், தரம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த இரு சக்கர நிறுவனம் பஜாஜ். தற்போது இந்தியாவில் பெட்ரோலில் ஓடும் இரு சக்கர வாகனங்களை காட்டிலும் மின்சார ஸ்கூட்டர்களுக்கு அதிகளவு வரவேற்பு வாகன ஓட்டிகள் மத்தியில் உருவாகியுள்ளது.
Bajaj Chetak:
பஜாஜ் நிறுவனத்தின் மின்சார இ ஸ்கூட்டர் Bajaj Chetak. இந்த இ ஸ்கூட்டர் 4 வேரியண்ட்களில் உள்ளது.
1. Chetak 3001 2. Chetak 3503 3. Chetak 3502 4. Chetak 3501
Chetak 3001:
இந்த Bajaj Chetak 3001 இ ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 987 ஆகும். இந்த இ ஸ்கூட்டரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 127 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 63 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இதன் பேட்டரி திறன் 3 கிலோ வாட் ஆகும். இந்த இ ஸ்கூட்டர் கருப்பு, சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளது.
Chetak 3503:
பஜாஜ் நிறுவனத்தின் Chetak 3503 விலை ரூபாய் 1 லட்சத்து 17 ஆயிரத்து 230 ஆகும். இந்த இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் ரூபாய் 155 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. அதிகபட்சமாக மணிக்கு 63 கிலோ மீட்டர் வரை செல்லலாம். இந்த இ ஸ்கூட்டர் 3.5 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டது ஆகும். இது 20 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது.
Chetak 3502:
பஜாஜ் நிறுவனத்தின் இந்த Chetak 3502 இ ஸ்கூட்டர் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரத்து 492 ஆகும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 153 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 3.5 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டது ஆகும். 20 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்ய 3.25 மணி நேரம் ஆகும். இந்த இ ஸ்கூட்டர் வெள்ளை, சாம்பல் மற்றும் நீலம் நிறத்தில் உள்ளது.
Chetak 3501:
பஜாஜின் இந்த Chetak 3501 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 734 ஆகும். இந்த இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 153 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. மணிக்கு 73 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 3.5 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டது. 20 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதை சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரம் ஆகிறது. சிவப்பு, நீலம் மற்றும் பழுப்பு நிறத்தில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது.
நகர்ப்புறங்களில் நெருக்கடியான சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. டிரம் ப்ரேக் இதில் உள்ளது. இதில் 35 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. ரிவர்ஸ் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது. 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோ மீட்டர் பேட்டரி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மோட்டாருக்கு 3 வருடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.
மொபைல் செயலி மூலம் பேட்டரி சார்ஜ் நிலவரத்தை கண்டறியலாம்.





















