Ather 450: சிங்கிள் சார்ஜில் 161 கிலோ மீட்டர் மைலேஜ்.. Ather 450 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
ஏதர் நிறுவனத்தின் பிரபலமான Ather 450 இ ஸ்கூட்டரின் வேரியண்ட், விலை, சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இ ஸ்கூட்டர் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் தேவை, சுற்றுச்சூழல் மாசு போன்றவைக்கு தீர்வாக இ ஸ்கூட்டர்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
Ather 450:
இந்தியாவில் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஏதர். ஏதர் நிறுவனம் பல்வேறு மாடல்களை இந்த இ ஸ்கூட்டரில் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அதில் மிகவும் பிரபலமான மாடல் Ather 450 ஆகும். இந்த இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் உள்பட சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.
Ather 450 இந்த இ ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் 1.36 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 2.03 லட்சம் ஆகும். இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 5 வேரியண்ட் உள்ளது.
1. Ather 450 S:
இந்த Ather 450 S இ ஸ்கூட்டர் அடிப்படை வேரியண்ட் ஆகும். இதன் விலை ரூபாய் 1.36 லட்சம் ஆகும். இது 2.9 கிலோவாட் பேட்டரியை கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 122 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. 40 கிலோ மீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டும். இது சார்ஜ் ஏறுவதற்கு 8.3 மணி நேரம் வரை ஆகிறது.
2.Ather 450 S:
இந்த Ather 450 S இ ஸ்கூட்டர் 3.7 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இதன் விலை ரூபாய் 1.58 லட்சம் ஆகும். இந்த இ ஸ்கூட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 161 கிலோ மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. இதில் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். 3.9 நொடிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும். இது 100 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு 5.45 மணி நேரம் ஆகிறது.
3.Ather 450 X:
ஏதரின் Ather 450 X வேரியண்ட் இ ஸ்கூட்டர் 2.9 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இதன் விலை ரூபாய் 1.66 லட்சம் ஆகும். 26 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இது 100 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு 4.3 மணி நேரம் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 126 கிலோ மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. 3.3. நொடிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது.
4. Ather 450 X:
ஏதர் நிறுவனத்தின் இந்த Ather 450 X இ ஸ்கூட்டர் 3.7 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இதன் விலை ரூபாய் 1.76 லட்சம் ஆகும். 26 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது ஆகும். இது ஒரு முறை சாரஜ் செய்தால் 161 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 40 கிலோ மீ்ட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டும்.
5.Ather 450 Apex:
Ather 450 இ ஸ்கூட்டரில் டாப் வேரியண்ட் இந்த Ather 450 Apex ஆகும். இதன் விலை ரூபாய் 2.03 லட்சம் ஆகும். இது 3.7 கிலோவாட் பேட்டரியை கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 157 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 40 கிலோ மீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டும். இது 100 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு 5.45 மணி நேரத்தில் எட்டிவிடும்.
சிறப்பம்சங்கள்:
இந்த இ ஸ்கூட்டரின் அனைத்து வேரியண்ட்களும் தொடு திரை கொண்ட தகவல்கள் நிறைந்த டிஸ்ப்ளே கொண்டது. இதில் சார்ஜ், பேட்டரி திறன் ஆகியவை காட்டப்படும். ஓட்டுவதற்கு இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 739 மில்லி மீட்டர் ஆகும். இருக்கை உயரம் 780 மி.மீட்டர் ஆகும். நீளம் 18.91 செ.மீட்டர் ஆகும். இந்த இ ஸ்கூட்டரின் எடை 111.6 கிலோ ஆகும். இதன் உயரம் 11 செ.மீட்டர் ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீட்டர் ஆகும். 12 இன்ச் அலாய் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
டிஸ்க் ப்ரேக் வசதி இதில் உள்ளது. ட்யூப்லஸ் டயர் இதில் உள்ளது. இந்த இ ஸ்கூட்டர் கருப்பு, நீலம், சாம்பல், வெள்ளை, சிவப்பு உள்பட 8 வண்ணங்களில் உள்ளது. இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஓட்டும் வகையில் வசீகரமான தோற்றத்துடன் இந்த இ ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.





















