மேலும் அறிய

BE 6 Batman: பேட்மேன் பித்து..! 7 நிமிடங்கள் தான் 999 யூனிட்களும் காலி, 3வது பேட்ச் வருமா? கூடுதல் விலை?

Mahindra BE 6 Batman Edition: மஹிந்த்ரா BE 6 மின்சார காரின் பேட்மேன் எடிஷனுக்கான இரண்டாவது பேட்ச்சின் முன்பதிவில், 999 யூனிட்களும் வெறும் ஏழே நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளன.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் 7 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது.
  • 999 யூனிட்கள் கொண்ட இரண்டாவது பேட்ச் முன்பதிவு உடனடியாக முடிந்தது.
  • ரூ.28.49 லட்சத்தில் கிடைக்கும், 682 கிமீ ரேஞ்ச் கொண்டது.
  • மூன்றாவது பேட்ச் வெளியீடு குறித்து பரிசீலனையில் உள்ளது.

Mahindra BE 6 Batman Edition: வாடிக்கையாளர்களிடையே கிடைத்த பிரமாண்ட வரவேற்பை தொடர்ந்து, BE 6 மின்சார காரின் பேட்மேன் எடிஷன் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 

7 நிமிடங்களில் காலியான BE 6 பேட்மேன் எடிஷன்:

மஹிந்த்ராவின் மின்சார காரான BE 6 மாடலின் பேட்மேன் எடிஷன் வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 6ம் தேதி இந்த லிமெடெட் எடிஷனுக்கான இரண்டாவது பேட்ச் முன்பதிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், முதல் 7 நிமிடங்களிலேயே மொத்த யூனிட்களும் விற்று தீர்ந்துவிட்டதாக மஹிந்த்ரா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பேட்சிலேயே வெறும் 300 யூனிட்களே மட்டுமே திட்டமிடப்பட்ட நிலையில், பின்பு அது 999 யூனிட்களாக உயர்த்தப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

அதைதொடர்ந்து தற்போது கொண்டு வரப்பட்ட இரண்டாவது பேட்ச்சும் 999 யூனிட்களை உள்ளடக்கி இருந்தது. அவை மொத்தமே 7 நிமிடங்களில் விற்பனையாகியுள்ளன. முன்னதாக முதல் பேட்ச் வெறும் 135 விநாடிகளில் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ள இந்த பேட்மேன் எடிஷனின் விலை, ரூ.28.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க விதமாக முதல் பேட்ச்சை காட்டிலும் இரண்டாவது பேட்ச்சின் விலை ரூ.70 ஆயிரம் அதிகமாகும். 

BE 6 பேட்மேன் எடிஷன் - முக்கிய அம்சங்கள்:

BE 6 மாடலின் பேக் த்ரீ ட்ரிம்மை அடிப்படையாக கொண்டு இந்த பேட்மேன் எடிஷனை மஹிந்த்ரா உருவாக்கியுள்ளது. சாடின் ப்ளாக் கலர் தீமை கொண்டுள்ளதோடு, முன்புற ஃபெண்டர்கள், வீல் ஹப்கேப்ஸ், மற்றும் ரியர் பம்பரில் பேட்மேன் அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பேட்மேன் டெகல்ஸ், படல் லேம்ப் மூலம் புரொஜெக்ட் செய்யப்படும் பேட்மேன் லோகோ,  சிவப்பு நிற பேட்மேன் லைட்டிங் அம்சங்களுடன் கூடிய பனோரமிக் சன் ரூஃப், பெரிய 20-இன்ச் அலாய் வீல்கள், ப்ரேக் காலிப்பர்களில் தங்க பூச்சு மற்றும் சஸ்பென்ஷன் போன்ற டிசைனிங் கூறுகள் ஆகியவை காரின் ஸ்போர்ட்டி தோற்றத்தை மேலும் மேம்படுத்துகின்றன.

BE 6 Batman: பேட்மேன் பித்து..! 7 நிமிடங்கள் தான் 999 யூனிட்களும் காலி, 3வது பேட்ச் வருமா? கூடுதல் விலை?

உட்புறத்தில் மஹிந்த்ரா BE 6 பேட்மேன் எடிஷனானது, முற்றிலும் கருப்பு நிறத்திலான டேஷ்போர்ட், சென்டர் கன்சோலில் கோல்டன் ஹைலைட்ஸ், ஸ்டியரிங் வீல் மற்றும் கீ ஃபாப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதுபோக செண்டர் கன்சோலின் மையப்பகுதியில் யூனிட்டின் எண்ணானது தங்க முலாமிம் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் பட்டியலானது, பேக் த்ரீ ட்ரிம்மில் உள்ளவற்றை அப்படியே பிரதிபலிக்கிறது. 

BE 6 பேட்மேன் எடிஷன் - பேட்டரி பேக் & ரேஞ்ச்

மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன், மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட பெரிய 79kWh LFP  பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. அதிகபட்சமாக 281bhp பவரையும் 380Nm டார்க்கையும் உற்பத்தி செய்து,  EV 6.7 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை எட்டுகிறது. ரேஞ்ச், எவ்ரிடே மற்றும் ரேஸ் ஆகிய மூன்று ட்ரைவ் மோட்களை கொண்டுள்ளது. கூடுதலாக ஒரு பூஸ்ட் மோடும் உள்ளது. இதில் 10 வினாடிகள் அதிகபட்ச டார்க்கை வழங்குகிறது.

BE 6 Batman: பேட்மேன் பித்து..! 7 நிமிடங்கள் தான் 999 யூனிட்களும் காலி, 3வது பேட்ச் வருமா? கூடுதல் விலை?

நிலையான பேக் த்ரீ வேரியண்டை போலவே, பேட்மேன் எடிஷனும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 682 கிமீ ரேஞ்சை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 175kWh DC வேகமான சார்ஜிங் ஆப்ஷன்களை ஆதரிப்பதோடு, நிலையான 11.2kWh AC மற்றும் 7.3kWh AC சார்ஜிங் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது.

BE 6 Batman: பேட்மேன் பித்து..! 7 நிமிடங்கள் தான் 999 யூனிட்களும் காலி, 3வது பேட்ச் வருமா? கூடுதல் விலை?

பேட்மேன் எடிஷன் - மூன்றாவது பேட்ச் வருமா?

வாடிக்கையாளர்களிடையே நிலவும் தீவிரமான தேவையை கருத்தில் கொண்டு, பேட்மேன் எடிஷனின் மூன்றாவது பேட்ச்சை மஹிந்த்ரா வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது. அதிகப்படியான தேவை இருப்பதால் மீண்டும் ஒருமுறை பேட்மேன் எடிஷனை கொண்டு வர ப்ராண்ட் தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Frequently Asked Questions

மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷனின் இரண்டாவது பேட்ச் எவ்வளவு விரைவில் விற்றுத் தீர்ந்தது?

மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷனின் இரண்டாவது பேட்ச் முன்பதிவுக்கு வந்த 7 நிமிடங்களுக்குள் மொத்த யூனிட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

BE 6 பேட்மேன் எடிஷனின் விலை என்ன?

மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷனின் விலை ரூ.28.49 லட்சம் ஆகும். இது முதல் பேட்சை விட ரூ.70 ஆயிரம் அதிகம்.

BE 6 பேட்மேன் எடிஷனின் ஒருமுறை சார்ஜ் செய்தால் கிடைக்கும் ரேஞ்ச் என்ன?

BE 6 பேட்மேன் எடிஷன் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 682 கிமீ ரேஞ்சை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE 6 பேட்மேன் எடிஷனில் என்னென்ன சார்ஜிங் ஆப்ஷன்கள் உள்ளன?

இந்த எடிஷன் 175kWh DC வேகமான சார்ஜிங், 11.2kWh AC மற்றும் 7.3kWh AC சார்ஜிங் ஆப்ஷன்களை ஆதரிக்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Maruti 7 Seater: 32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி

Embed widget