kia Upcoming Cars: பீஸ்ட் மோடில் கியா.. ஹைப்ரிட், இன்ஜின், மின்சார எடிஷன் - அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்கள், எகிறும் டிமேண்ட்
Honda Prelude: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ள 3 கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Honda Prelude: கியா நிறுவனம் அடுத்தடுத்து ஹைப்ரிட், மின்சார எடிஷன் மற்றும் ஹைப்ரிட் என 3 கார் மாடல்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த கியா திட்டம்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபலமான மற்றும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வரும், கார் உற்பத்தி நிறுவனமாக கியா திகழ்கிறது. ஸ்டைல் மற்றும் பல்வேறு அம்சங்கள் அடங்கிய வாகனங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறது. விற்பனை அடிப்படையில் தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்து வரும் இந்த கொரிய நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை உணர்ந்து புதிய மாடல்களையும் அவ்வப்போது சந்தைப்படுத்துகிறது. இந்நிலையில் உள்நாட்டு சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் விதமாக, 2026-27 காலகட்டத்தில் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாம். அதில் புதிய மின்சார மற்றும் 7 சீட்டர் எஸ்யுவியும் அடங்கும் என கூறப்படுகிறது.
கியாவின் மூன்று புதிய கார்கள்:
1. அடுத்த தலைமுறை கியா செல்டோஸ்
புதிய தலைமுறை கியா செல்டோஸ் கார் மாடலானது வரும் டிசம்பர் 10ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து, 2026ம் ஆண்டின் முதற்பாதியில் இந்திய சந்தையில் இந்த கார் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது தலைமுறை செல்டோஸ் கார் மாடலானது, ஏற்கனவே பல இடங்களில் இந்திய சாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. நிறுவனத்திற்குள் SP3i என்ற கோட்நேமை கொண்ட இந்த மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது, முற்றிலும் புதிய டிசைனை பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த அளவீடுகளிலும் இந்த கார் வளர்ச்சியை பெறும் என கூறப்படுகிறது.
இந்தியாவிற்கான எடிஷனானது ஏற்கனவே நன்கு அறியப்பட்ட 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் tGDi பெட்ரோல்,1.5 லிட்டர் CRDi டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இடம்பெறலாம். இதுபோக, புதிய தலைமுறை செல்டோஸில் வலுவான ஹைப்ரிட் ஆப்ஷனை வழங்கவும் கியா திட்டமிட்டுள்ளதாம்.
2. கியா சைரோஸ் மின்சார எடிஷன்:
இந்திய சந்தையில் சைரோஸ் கார் மாடலை அறிமுகப்படுத்த உள்ளதை கியா நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. காலக்கெடு உறுதி செய்யப்படாத நிலையில், அடுத்த ஆண்டில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைன் குறித்து ஆராய்ந்தால், சைரோஸ் மின்சார எடிஷனின் வடிவமைப்பில் லேசான மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. உதாரணமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், புதிய ஏரோ எஃபிசியண்ட் அலாய் வீல்கள் மற்றும் மின்சார எடிஷனுக்கான தனிப்பட்ட டச்கள் வழங்கப்படக் கூடும். பேட்டரி தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், சுமார் 400 கிலோ மீட்டர் ரேன்சை இந்த கார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் சைரோஸ் மின்சார் எடிஷனானது டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்த்ரா XUV 400 மின்சார எடிசன் உடன் போட்டியிட உள்ளது.
3. கியா சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவி
கியாவின் புதிய சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவி ஆனது, அண்மையில் தான் முதன்முறையாக இந்தியாவில் சாலை சோதனையில் ஈடுபட்டது. MQ4i என்ற கோட்நேமில் உருவாக்கப்படும் இந்த 3 வரிசை இருக்கை கொண்ட ஹைப்ரிட் எஸ்யுவி ஆனது, 2026ம் ஆண்டிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் முகப்பு விளக்கு செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது. இது சர்வதேச சந்தைக்கான சொரெண்டோவை போலவே காட்சியளிக்கிறது.
இந்த காரில் 19 இன்ச் அலாய் வீல்கள், சில்வர் ரூஃப் ரெயில்ஸ், ஃப்ரண்ட் பார்கிங் சென்சார்கள், ஸ்ப்லிட் டைப் எல்இடி டெயில்லேம்ப்ஸ் ஆகிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் போட்டித்தன்மை மிக்க விலையுடன், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வலுவான ஹைப்ரிட் ஆப்ஷனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே பவர்ட்ரெயின் ஆப்ஷன் தான் அடுத்த தலைமுறை செல்டோஸ் உடனுன் கியா பகிரும் என தெரிகிறது. உள்நாட்டு சந்தையில் இந்த காரானது ஜீப் மெரிடியன், டொயோட்டா ஃபார்ட்சுனர், ஸ்கோடா கோடியாக், எம்ஜி க்ளோஸ்டர் ஆகியவற்றுடன் போட்டியிட உள்ளது.






















