Kia Seltos 2026: இந்தா வச்சிக்கோ.. கூல் டிசைன், நவீன அம்சங்கள், ஹைப்ரிட் இன்ஜின் - கியா செல்டோஸ் புதிய அவதாரம்
Kia Seltos 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செல்டோஸ் காரின் மேம்படுத்தப்பட்ட எடிஷனை, வரும் டிசம்பர் 10ம் தேதி அறிமுகப்படுத்த கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

Kia Seltos 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செல்டோஸ் காரின் மேம்படுத்தப்பட்ட எடிஷனை, வரும் டிசம்பர் 10ம் தேதி அறிமுகப்படுத்த கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
கியா செல்டோஸ் 2026:
கியா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் மாடல்களின் ஒன்றான செல்டோஸின் இரண்டாவது தலைமுறை, வரும் டிசம்பர் 10ம் தேதி கொரியாவில் இருந்தபடி சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சண்டைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்த மாடல் பல்வேறு சாலை பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, தற்போதைய எடிஷனுடன் ஒப்பிடுகையில் புதிய செல்டோஸில் தீவிர டிசைன் மற்றும் அம்ச மேம்பாடுகள் இருப்பதை உணர முடிகிறது.
புதிய தலைமுறை செல்டோஸில், தற்போதுள்ள இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர்வதோடு, கூடுதலாக ஹைப்ரிட் ஆப்ஷன் சேர்க்கப்பட உள்ளது.ஆனால், அந்த வேரியண்ட் 2027ம் ஆண்டில் தான் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பயனர்கள் தேர்வு செய்யலாம்.
7 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்?
தற்போது விற்பனையில் உள்ள செல்டோஸ் எடிஷனில் இடம்பெற்று இருக்கும், ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் அப்படியே தொடர வாய்ப்புள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, புதிய எடிஷனில் கூடுதலாக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வேரியண்டில் 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் பிரத்யேகமாக சேர்க்கப்படலாம். தற்போதைய நிலவரப்படி செல்டோஸ் டீசல் காரானது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் வசதிகளை கொண்டுள்ளது.
கியா செல்டோஸ் ஹைப்ரிட் - எதிர்பார்ப்புகள் என்ன?
1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினை கொண்டு, ஹைப்ரிட் அம்சம் சேர்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே பெட்ரோல் - ஜைப்ரிட் அம்சம் தான், கியா சார்பில் விரைவில் வெளியாக உள்ள 7 சீட்டர் எஸ்யுவியிலும் இடம்பெற உள்ளதாம். இந்திய சந்தைக்கு முன்பாகவே கியாவின் புதிய செல்டோஸ் சர்வதேச சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் வழங்கப்பட உள்ள e-AWD தொழில்நுட்ப வசதி, இந்தியாவிற்கான மாடலில் இருக்காது என்று கருதப்படுகிறது.
கியா செல்டோஸ் 2026 - புதிய டிசைன்
கியா நிறுவனமானது தனது "Opposites United" என்ற புதிய வடிவமைப்பு பாணியை செல்டோஸில் பயன்படுத்தியுள்ளது. அதன்படி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்புற க்ரில், ஸ்லிம் மற்றும் ஆங்குலர் வெர்டிகல் பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், திருத்தப்பட்ட ஃபாக் லேம்ப் அமைப்பு, புதிய அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் டெயில் லேம்ப் ஆகியவை வழங்கப்படலாம். ஒட்டுமொத்த அளவீட்டிலும் இந்த எஸ்யுவி வளர்ச்சியை காணலாம்.
கியா செல்டோஸ் 2026 - எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
விலைக்கு நிகரான மதிப்பை உயர்த்தும் வகையில், புதிய வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களை, இரண்டாவது தலைமுறை செல்டோஸில் கியா இணைக்கக் கூடும். அதன்படி, சைரோஸில் இருப்பதை போன்ற ட்ரினிட்டி பனோரமிக் டிஸ்பிளேவை கடன் வாங்கக் கூடும். இதுபோக வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட டேஷ்போர்ட் மற்றும் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளிட்டவற்றையும் பெறலாம். தற்போதைய செல்டோஸின் விலை வரம்பு ரூ.10.79 லட்சத்தில் தொடங்கி ரூ.19.80 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. புதிய மாற்றங்கள் மற்றும் அப்க்ரேட் அடிப்படையில், இரண்டாவது தலைமுறை செல்டோஸ் காரின் விலை சற்றே உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















