Kia Sorento: இந்தியாவிற்கான முதல் ஹைப்ரிட் காரை பேக் செய்த கியா - 7 சீட்டர், டர்போசார்ஜ்ட் இன்ஜின் - லாஞ்ச் டேட்?
Kia Sorento Hybrid: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான தனது முதல் ஹைப்ரிட் கார் மாடலான சொரெண்டோவின், சாலை பரிசோதனையை கியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

Kia Sorento Hybrid: கியா ஹைப்ரிட் கார் மாடலான சொரேண்டோ, இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
கியா 7 சீட்டர் ஹைப்ரிட்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான கியாவின் முதல் ஹைப்ரிட் கார் மாடல் மீண்டும் சாலை பரிசோதனையின் போது சிக்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் புதிய 3 வரிசை இருக்கைகளை கொண்ட எஸ்யுவி தொடர்பான பல தகவல்கள் கிடைத்துள்ளன. நீளமான கண்ணாடி அமைப்பு மற்றும் நிமிர்ந்த வால் பகுதியானது, கியா நிறுவனமானது துல்லியமான ஒரு 7 சீட்டர் ப்ரீமியம் கார் மாடலை உருவாக்கி வருவதை உணர்த்துகிறது. இந்த காரானது, உள்நாட்டில் ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் செல்டோஸிற்கு மேலே நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
சொரெண்டோவை களமிறக்கும் கியா
வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள சொரெண்டோ ஹைப்ரிட் கார் மாடல்களில் இருப்பதை போன்ற, டூயல் டோன் 19 இன்ச் அலாய் வீல்கள் அப்படியே பின்தொடரப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, ஒருவழியாக இந்திய சந்தையில் சொரெண்டோ கார் மாடலை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த கியா நிறுவனம் தயாராகி வருவதாக நம்பப்படுகிறது. அண்மையில் தான் சர்வதேச சந்தையில் சொரெண்டோ காரானது அப்க்ரேட்களுக்கு உட்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சொரெண்டோ வெளிப்புற விவரங்கள்
அதன் தனித்துவமான சில அம்சங்கள் இந்திய மாடலுக்கும் அப்படியே வழங்கப்படுவதாக தெரிகிறது. வெளிநாட்டு சந்தையில் எஸ்யுவியின் இருமுனைகளிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட T வடிவிலான எல்இடி மற்றும் ப்ராண்டின் ஸ்டார் மேப் பாணியிலான பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட லைட்டிங் சிக்னேட்சரை கொண்டுள்ளது. இதில் புதியதாக இண்டெர்ஸ்டெல்லார் க்ரே, மினெரல் ப்ளூ , சிட்டிஸ்கேப் க்ரீன் மற்றும் மணல் மாதிரியான வெள்ளை போன்ற வெளிப்புற வண்ண விருப்பங்களும் இணைக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் புதிய டஸ்ட் ப்ளூ தீமும் வழங்கப்பட்டுள்ளது.

சொரெண்டோ உட்புற விவரங்கள்
சர்வதேச சந்தையில் உள்ள சொரெண்டோ கார் மாடலானது ஸ்க்ரீன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பேஸ் வேரியண்டில் உள்ள அகலமான பேனலில் பேரிய 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன் உடன் இணைக்கப்பட்ட 4.3 இன்ச் மல்டி - இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. டாப் எண்ட் வேரியண்ட்கள் கர்வ்ட் பேனல்களை கொண்டு, இரண்டு 12.3 இன்ச் ஸ்க்ரீன்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இது அப்படியே இந்திய சந்தைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 சீட்டரானது கியாவின் சமீபத்திய ccNC மென்பொருளை கொண்டிருக்கிறது. இது விரைவான பதில்கள், மேம்படுத்தப்பட்ட க்ராபிக்ஸ் மற்றும் டிரிமைப் பொறுத்து ஓவர் தி ஏர் அப்டேட்களை பெறும் திறனைக் கொண்டுவருகிறது. உலகளாவிய மாடலின் தொடக்க நிலை வேரியண்டில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றையும், மூன்று வரிசைகளிலும் சிதறிக்கிடக்கும் பல USB-C போர்ட்களையும் கொண்டுள்ளது. காற்றோட்டமான இருக்கைகள், ஒரு மெல்லிய தோல் பூசப்பட்ட கூரை லைனர் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் கீ 2.0 அமைப்பு போன்ற பிரீமியம் அம்சங்கள் சிறந்த SX-P வேரியண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சொரெண்டோ - பவர்ட்ரெயின் விவரங்கள்:
இந்திய சந்தைக்கு சொரெண்டோவின் மொத்த வேரியண்ட்களையும் கியா களமிறக்குமா? அல்லது டாப் ஸ்பெக் வேரியண்டை மட்டும் விற்பனைக்கு கொண்டு வருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த ஹைப்ரிட் காரில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 44.2 kW மின்சார மோட்டார் மற்றும் 1.5 kWh பேட்டரி பேக்குடன் இணைந்து செயல்படுகிறது. இந்த அமைப்பானது 227 hp மற்றும் 250 Nm ஆற்றலை வெளியிடுகிறது மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் பெரும்பாலான ட்ரிம்களில் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் நிலையான ஆப்ஷனாக உள்ளது. அதே நேரத்தில் ஆல்-வீல் ட்ரைவ் ஆப்ஷன் அல்லது வேரியண்டை பொறுத்து நிலையானதாக உள்ளது.
சொரெண்டோ - கட்டமைப்பு, போட்டியாளர்கள்:
பெரிய அளவு மற்றும் கட்டுமஸ்தான எடை இருந்தபோதிலும், சொரெண்டோஈர்க்கக்கூடிய எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது. ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் எடிஷன்கள் தோராயமாக லிட்டருக்கு 15.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இயந்திர கற்றல் அடிப்படையிலான ஸ்மார்ட் குரூஸ் கட்டுப்பாடு, இது ஓட்டுநரின் பாணியைப் படித்து பிரதிபலிக்கிறது மற்றும் சரியான சூழ்நிலையில் பாதை மாற்றங்களை உதவும் திறன் கொண்ட ஹைவே டிரைவிங் அசிஸ்ட்டின் சமீபத்திய பதிப்பு போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. உள்நாட்டு சந்தையில் அடுத்த ஆண்டு சொரெண்டோ ஹைப்ரிட் காரானது அறிமுகப்படுத்தப்படும் போது, ஜீப் மெரிடியன், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக், எம்ஜி குளோஸ்டர் உள்ளிட்டவற்றிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும்.





















