Triumph Scrambler: இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகிறது டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 1200 மாடல் - புதிய அம்சங்கள் என்ன?
Triumph Scrambler: டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 1200 மாடலில் எடிஷன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Triumph Scrambler: டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 1200 மாடலில் வழக்கமான தொடக்க வேரியண்டான XC-க்கு மாற்றாக, புதிய X வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர்:
டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 1200 மாடல் மோட்டார் சைக்கிளின் 2024ம் ஆண்டு எடிஷனில், சர்வதேச அளவில் இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமாக இடம்பெறும் XC வேரியண்டிற்கு க்கு மாற்றாக, இந்த முறை X வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டாப் ரேஞ்சான XE வேரியண்டில் வாடிக்கையாளர்களை கவரும் விதமான சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு வேரியண்ட்களுக்குமான ஒற்றுமைகள்:
X மற்றும் XE ஆகிய இரண்டு வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான லிக்விட் கூல்ட், 90hp, 110Nm, 1,200cc, பாரல்லல் டிவின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டார்ட் அசிஸ்ட் கிளட்ச் கொண்ட 6 ஸ்பீட் க்யர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளும் முந்தைய மாடல்களில் இருந்து புதிய பெயிண்ட் மற்றும் புதிய, மெலிதான LED டெயில்-லைட் மட்டுமே பிரிக்கின்றன. முந்தைய பைக்குகளில் 16 லிட்டராக இருந்த எரிபொருள் திறன் 15 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளும் டியூப்லெஸ் டயர், ஸ்போக்ட் ரிம்கள் அளவு 90/90-21 மற்றும் பின்புறம் 150/70-R17 அளவு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளன.
டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் X வேரியண்ட்:
முந்தைய ஸ்க்ராம்ப்ளர் 1200 XC வேரியண்டில் 840mm ஆக இருந்த இருக்கை உயரம், புதிய X வேரியண்டில் 820mm ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மழை, சாலை, விளையாட்டு, ஆஃப்-ரோடு மற்றும் ரைடர் ஆகிய 5 மோட்களை வழங்குகிறது. விருப்பமான புளூடூத் தொகுதியுடன், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அறிவிப்பு விழிப்பூட்டல்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. IMU-பொருத்தப்பட்ட டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ABS ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.
டிரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் XE வேரியண்ட்:
XE வேரியண்ட் முந்தைய மாடலில் இருந்து பெரிய அளவில் மாற்றங்களை பெறாவிட்டாலும், கவனத்தை ஈர்க்கும் வகையிலான சில அப்டேட்களை பெற்றுள்ளது. சஸ்பென்ஷன் இப்போது மர்சோச்சியின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இருக்கை உயரம் இன்னும் 870 மிமீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. Ducati Panigale V4 S இல் பெறுவது போன்ற பிரெம்போ ஸ்டைல்மா காலிப்பர்களையும் XE பெற்றுள்ளது. ஏற்கனவே உள்ள ஐந்து ரட் மோட்களுடன் இதில் கூடுதலாக, ஆஃப்-ரோட் ப்ரோ மோடும் இடம்பெற்றுள்ளது. டிரையம்ப் வாகன மாடல்களுக்கே உரித்தான வகையில் இதற்கு 70 உதிரி பாகங்கள் தனித்தனியே விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை 12 லட்ச ரூபாய் எனவும், அதிகபட்ச விலை 13 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.