2024 Mercedes-Benz E-Class: அப்புறம் என்னப்பா..! செல்ஃபி கேமராவுடன் வந்த மெர்சிடஸ் பென்ஸ் இ -கிளாஸ் - எப்படி இருக்கு? ரிவ்யூ இதோ..!
2024 Mercedes-Benz E-Class: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மெர்சிடஸ் நிறுவனத்தின் பென்ஸ் இ -கிளாஸ் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2024 Mercedes-Benz E-Class: மெர்சிடஸ் நிறுவனத்தின் பென்ஸ் இ -கிளாஸ் கார் மாடலில் உள்ள, தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மெர்சிடஸ் பென்ஸ் இ -கிளாஸ்:
Mercedes-Benz நிறுவனம் அதன் அதிக விற்பனையாகும் சொகுசு செடானின், புதிய தலைமுறை E-கிளாஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.78.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய இ-கிளாஸ் கூடுதல் தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வருகிறது. இது நீளமானது. டிசைனை பொறுத்தவரையில், புதிய இ-கிளாஸ் ஸ்டார் பேட்டர்ன் மற்றும் புதிய ஃப்ளஷ் டோர் ஹேண்டில்களுடன் புதிய கிரில்லைப் பெறுகிறது.
வடிவமைப்பில் மாற்றங்கள்:
வாகனத்தின் மற்ற மாற்றங்களில் புதிய LED ஹெட்லைட்கள், டெயில்லைட்கள் மற்றும் மென்மையான மூடும் கதவுகள் ஆகியவை அடங்கும். E-கிளாஸ் உள்ளே இப்போது ஒரு சூப்பர்ஸ்கிரீன் கிடைக்கிறது, அங்கு இரண்டு திரைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கூடுதலாக ஓட்டுனருக்கான டிஜிட்டல் டிஸ்பிளேவும் கிடைக்கிறது. புதிய டிஜிட்டல் வென்ட் கன்ட்ரோல்களும் உள்ளன. அதே சமயம் ஜூம் மீட்டிங்குகளுக்குப் பயன்படுத்தக்கூடிய செல்ஃபி கேமரா போன்ற கூடுதல் அம்சங்களும் புதிய E-கிளாஸில் சேர்க்கப்பட்டுள்ளன.