Maruti Suzuki Dzire vs Rivals: மாருதியின் புதிய டிசைர் Vs ஹோண்டா அமேஸ், டாடா டைகோர், ஹுண்டாய் ஆரா - எது பெஸ்ட்?
Maruti Suzuki Dzire vs Honda Amaze Tata Tigor Hyundai Aura: மாருதி சுசூகியின் டிசைர் கார் மாடல், அதன் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கிறதா என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Maruti Suzuki Dzire vs Honda Amaze Tata Tigor Hyundai Aura: மாருதி சுசூகியின் டிசைர் கார் மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஹோண்டா அமேஸ், டாடா டைகோர் மற்றும் ஹுண்டாய் ஆரா கார் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
மாருதி சுசூகி டிசைர் 2024:
மருதி சுசூகியின் ஐந்தாவது தலைமுறை டிசைர் கார் மாடல், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை, 6.7 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சோதனையில் 5 நட்சத்திரங்களை பெற்ற அந்த நிறுவனத்தின் முதல் கார் என்பதும் டிசைருக்கு கிடைத்த கூடுதல் பெருமையாகும். இந்நிலையில், இந்திய சந்தையில் டிசைர் கார் மாடல் ஹோண்டா அமேஸ், டாடா டைகோர் மற்றும் ஹுண்டாய் ஆரா ஆகியவற்றிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது. எனவே, அவற்ற்இன் விலை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் ஒப்பிட்டை அறிந்து எது சிறந்தது என்பதை நாமே தீர்மானிக்கலாம்.
மாருதி சுசூகி டிசைர் vs போட்டியாளர்கள் வடிவமைப்பு:
பரிமாணங்களைப் பொறுத்தவரை, மாருதி சுசூகி டிசையர் 3995 மிமீ நீளம், 1735 மிமீ அகலம் மற்றும் 1525 மிமீ உயரத்தை கொண்டுள்ளது. காம்பாக்ட் செடான் 2450மிமீ வீல்பேஸை கொண்டுள்ளது.
ஒப்பிடுகையில், ஹோண்டா அமேஸ் டிசைரின் அதே நீளத்தை கொண்டுள்ளது. ஆனால் 2470 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது. இருப்பினும் ஹோண்டா 1695 மிமீ மற்றும் 1501 மிமீ டிசைரை விட அகலத்தில் குறுகலாகவும் உயரம் குறைவாகவும் உள்ளது.
டாடா டைகோர் டிசைரை விட குறைவாக 3993மிமீ நீளத்தையும், 1677மிமீ அகலத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும், டாடா டிசைரை விட அதிகமாக 1532 மிமீ என்ற உயரத்தை கொண்டுள்ளது. மேலும் 2450 மிமீ டிசைரின் அதே வீல்பேஸை பெற்றிருக்கிறது.
ஹூண்டாய் ஆராவைப் பொறுத்தவரை, இது மொத்த நீளத்தில் டிசைரைப் போலவே நீளமாக உள்ளது. அதே நேரத்தில் 1680 மிமீ உடன் டிசைரை விட அகலமாகவும் உள்ளது. மொத்த உயரம் 1520 மிமீ என குறைவாக உள்ளது. இருப்பினும் வீல்பேஸ் டிசையர் போலவே உள்ளது.
மாருதி சுசூகி டிசைர் vs போட்டியாளர்கள் இன்ஜின்:
டிசைரை இயக்குவது அதே 1.2-லிட்டர் 3-சில் Z-சீரிஸ் இன்ஜின் ஆகும், இது 80.4bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது, மேலும் இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது . உங்களுக்கு CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனும் உள்ளது.
ஹோண்டா அமேஸ், 1.2-லிட்டர் 4-சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 88.5bhp ஐ உற்பத்தி செய்கிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்த பிரிவில் அமேஸ் கார் மாடலை மிகவும் சக்திவாய்ந்த செடான் ஆக காட்டுகிறது. இந்த தேர்வில் CVT உடன் வழங்கப்படும் ஒரே செடானும் இதுவாகும்.
டாடா டைகோர் ஆனது 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 84.4bhp ஆற்றலை உருவாக்குகிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. டிகோர் ஒரு சிஎன்ஜி பவர் ட்ரெய்னுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஆட்டோமேடிக் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்ட சிஎன்ஜி பவர்டிரெய்னின் முதல்-இன் செக்மென்ட் ஆப்ஷன் இதில் கிடைக்கிறது.
ஹூண்டாய் ஆரா 1.2-லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 81.8 பிஎச்பி ஆற்றலை உற்பத்தி செய்கிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, சிஎன்ஜி பவர்டிரெய்னின் ஆப்ஷனும் உள்ளது.
மாருதி சுசூகி டிசைர் vs போட்டியாளர்கள் அம்சங்கள்:
புதிய டிசைர் முதன் முதலாக வழங்கப்பட்டுள்ள 360 டிகிரி கேமரா மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களால் முன்னிலை பெற்றாலும், இந்த செடான்கள் ஒவ்வொன்றும் தொழில்நுட்ப அம்சங்களில் மிகவும் சமமாகப் பொருந்துகின்றன. இந்த அனைத்து செடான்களும் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாட்டுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்களை கொண்டுள்ளன. இருப்பினும் அமேஸ் மற்றும் டைகோர் ஆகியவை டிரான்ஸ்மிஷன்களின் தேர்வில் முன்னணியில் உள்ளன. ஹோண்டா அமேஸ் ஒரு CVT ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பெறுகிறது. இது மற்ற செடான்களில் வழங்கப்படும் AMTகளுடன் ஒப்பிடும்போது மென்மையானது. இருப்பினும், டாடா டைகர் CNG மாறுபாட்டிலும் கூட AMT தேர்வுடன் வழங்கப்படுகிறது. இது ஒரு தானியங்கி வசதியுடன் செலவுகளை குறைக்கிறது.
மாருதி சுசூகி டிசைர் vs போட்டியாளர்களின் விலை:
மாருதி சுசூகி டிசைர் காரின் விலை ரூ.6.79 லட்சத்தில் தொடங்கி ரூ.10.14 லட்சம் வரை நீள்கிறது. டிசையர் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் இருந்தாலும், அறிமுக சலுகையாக டிசம்பர் 31, 2024 வரை மட்டுமே இந்த விலை தொடரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஹோண்டா அமேஸின் விலை ரூ.7.19 லட்சத்தில் இருந்து ரூ.9.95 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோண்டாவும் மிக விரைவில் அமேஸின் அடுத்த தலைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளது. டாடா டைகோரின் விலைகள் ரூ.5.99 லட்சத்தில் இருந்து தொடங்கி ரூ.8.39 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த போட்டியாளர்களில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் செடான் ஆகும். ஹூண்டாய் ஆரா காரின் விலை ரூ.6.48 முதல் ரூ.9.04 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.