ராசிகளுக்கான இன்றைய பலன்கள்: 


சந்திராஷ்டமம்:


பூரட்டாதி


மேஷம்: 


ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணிகள் நிறைவு பெறும். கடன் பாக்கி வந்து சேரும். விண்ணப்பித்த லோன் உள்ளிட்டவை கிடைக்க வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் அக்கறை கொள்ளவும்.

ரிஷபம்:


பொன், பொருள், பரிசு ஆகியவை வாங்கி மகிழும் நாள் இன்று. ஏதாவது ஒருவகையில் பாராட்டு, பரிசு கிடைக்கும். நோய் நீங்கும். ஆலய வழிபாடு பயன்தரும். உறவினர்கள் இல்லம் வருவர். 

மிதுனம்:


பதவி உயர்வு, சம்பள உயர்வு என ஏதாவது ஒரு வகையில் உயர்வடையும் நாள் இன்று. உங்களை தேடி பண வரவு இருக்கும். அதே நேரத்தில் சுபச் செலவுகளும் இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


கடகம்:


அனைவரிடத்திலும் அன்பு காட்டுவீர்கள். அனுபவம் நல்ல பாடம் தரும். கடந்த கால முயற்சிகளை நினைத்து பார்த்து இன்றைய பணிகளை தொடரவும். பிள்ளைகள் வழி உதவி கிடைக்கும். பெற்றோருடன் சிறுசிறு மனகசப்புகள் வந்து நீங்கும். 

சிம்மம்:


கடந்த சில நாட்களாக இருந்த மோசமான சூழல் விலகி இன்று நன்மை கிடைக்கும். சகோதரர் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். நல்ல நெருக்கம் இருந்தும் பிரிவில் உள்ள உறவினர்கள் இன்று சந்திக்க வாய்ப்புள்ளது. செலவுகள் வரும். அதை சமாளிப்பீர்கள்.


கன்னி:


செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். நினைத்தது நடக்கும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். புதிய ஆர்டர்கள் வரும். பெற்றோர் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். இருப்பினும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.

துலாம்:


பொதுவாகவே நீங்கள் அமைதியானவர்கள். இன்று அது அதிகரிக்கும். நம்மை சுற்றி நடப்பவற்றை பொறுமையாக பாருங்கள். அதன் பின் முடிவுகளை எடுங்கள். குழந்தைகளை கவனமாக கையாளுங்கள். பண நெருக்கடி இருக்கும். இருந்தாலும் சமாளிப்பீர்கள். 


விருச்சிகம்:


ஆர்வமுடன் எதையும் முயற்சிக்க விரும்புவீர்கள். சில நேரங்களில் அது எதிர்மறையாக அமையலாம். ஆனாலும் முயற்சியை கைவிடமாட்டீர்கள். பண நெருக்கடி தொடரும். மன குழப்பங்கள் இருக்கும். ஆனாலும் அனைத்தையும் சமாளித்துவிடுவீர்கள். குடும்ப வழியில் உதவிகள் கிடைக்கலாம். 

தனுசு:


இன்பமான நாளாக இன்றைய நாள் இருக்கப்போகிறது. நினைத்தவை நடக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ந்திருக்கப்போகிறீர்கள். அலுவலக வழி நற்செய்திகள் வரலாம். உடன் பணியாற்றுவோர் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை காட்டவும். 

மகரம்:


நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில்ரீதியாகவும், பண ரீதியாகவும் பிறர் உதவி கிடைக்கலாம். சில நாட்களாக இருந்த இருமல், காய்ச்சல் தொல்லைகள் நீங்கும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.


கும்பம்:


உடல் நலம் ஆரோக்கியம் பெறும். புத்துணர்ச்சியுடன் இன்றைய பணியை துவங்குங்கள். குடும்பத்தார் உற்சாகப்படுத்துவர். பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி குறையும். குடும்பத்தார் ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். 


மீனம்: